நாகப்பட்டினம் மாவட்ட பகுதியில் உள்ள நாகையில், தர்மகோவில் தெருவில் சிவபாண்டி( 34) என்ற ரவுடி வசித்து வருகிறார். இவரை மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்த பகுதியில் வைத்து ரவுடிகள் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
ஏற்கனேவே இந்த ரவுடி மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்துள்ளன. இந்த நிலையில் நேற்றைய தினத்தில் இவரின் நண்பர்கள் இருவருடன், மக்கள் நெருக்கடி மிகுந்த அபிராமி அம்மன் சன்னதி பகுதியில் இருக்கும் டீக்கடை ஒன்றில் டீ குடித்துவிட்டு, பைக்கில் ஏறியுள்ளார்.
அப்போது பைக்கில் வந்த ஐந்து பேர் கொண்ட குழு, திடீரென சிவபாண்டியை சுற்றி வளைத்தது. அதன் பிறகு அவர்கள் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்திகளால் அவரை சரமாரியாக வெட்டி தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் தலை சிதைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் .
இவருடன் வந்திருந்த நண்பர்கள் தப்பிச் சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த அவரது உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி., கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில், போலீசார் அந்த ஐந்து பேரையும் தேடி வருகின்றனர்.