fbpx

அடுத்தடுத்து 16 முறை.. காதலனால் துடிதுடித்து இறந்த காதலி.!

பெங்களூருவில் தன்னை கல்யாணம் செய்ய மறுத்த காதலியை பதினாறு முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்திருக்கிறார் காதலன். இச்சம்பவம் கர்நாடக மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. ஐடி நகரமான பெங்களூருவில் இயங்கி வரும் ஒமேகா ஹெல்த் கேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர் லீலாவதி பவித்ரா நளமதி. இவர் தனது பணியை முடித்துவிட்டு இரவு ஏழரை மணியளவில் அலுவலகத்திலிருந்து கீழே இறங்கி வந்தபோது அங்கு நின்று கொண்டிருந்த அவரது காதலனுக்கும் இவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. அப்போது ஆத்திரமடைந்த இவரது காதலன் பவித்ராவை, தலை வயிறு, தோள்பட்டை, கை என உடலின் பல்வேறு பகுதிகளில் 16 முறை கத்தியால் சரமாரியாக குத்தி இருக்கிறார். இதில் பலத்த காயமடைந்த பவித்ரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்திருக்கும் காவல்துறையினர் அவரது காதலனான தினகர் என்பவரை கைது செய்து இருக்கிறது. இவர் லாஜிஸ் ஹெல்த் கேர் என்ற நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தினகரும் பவித்ராவும் ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் பவித்ராவின் வீட்டில் சாதியை காரணம் காட்டி தினகருக்கு திருமணம் செய்து வைக்க மறுத்துள்ளனர். பவித்ராவும் வேறொருவரை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்ததால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக காவல்துறையில் வாக்குமூலம் அளித்திருக்கிறார். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்திருக்கின்றனர். இச்சம்பவம் பெங்களூரு பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Rupa

Next Post

Woww...! ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட விவரங்களை அறிய புதிய செயலி அறிமுகம்...! அசத்தும் அரசு..

Thu Mar 2 , 2023
ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட விவரங்களை அறிய அரசின் ‘சம்பல்’ செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேசிய சமூக உதவித் திட்டம் என்பது, இந்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு நலத்திட்டம். இத்திட்டத்தின் மூலம் இந்தியாவில் உள்ள முதியோர், விதவை மற்றும் ஊனமுற்றோர் போன்ற ஏழைக் குடும்பங்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்படுகிறது. ‘சம்பல்’ (SAMBAL) மொபைல் செயலி, தேசிய தகவலியல் மையத்தால் (NIC) உருவாக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிகள், ஓய்வூதியம் […]

You May Like