8 Indians rescued: ஓமனில் எண்ணெய் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கடலில் மூழ்கிய 9 பேரை இந்திய கடற்படையின் போர்க்கப்பல் மீட்டுள்ளது.
கொமொரோஸ் கொடியுடன் கூடிய எண்ணெய் டேங்கர் ராஸ் மத்ரகாவில் இருந்து தென்கிழக்கே 25 கடல் மைல் தொலைவில் துறைமுக நகரமான டுக்ம் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கடலில் கப்பல் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இலங்கையை சேர்ந்தவர்கள் 3 பேர் மற்றும் இந்தியாவை சேர்ந்வர்கள் 13 பேர் மாலுமிகள் ஆகிய 13 பேரின் நிலை என்ன ஆனது என்பது பெரும் கேள்விக்குறியாக இருந்தது. 117 மீட்டர் நீளம் கொண்ட இந்த கப்பல் குறுகிய கடல் பயணத்திற்கானது. இப்படி இருக்கையில் கப்பல் தலைக்கீழாக கவிழ்ந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து மீட்பு பணிகள் தொடங்கப்பட்டன. விபத்தை கேள்விப்பட்டவுடன் இந்திய போர்க்கப்பலான INS Teg விபத்து நடந்த இடத்திற்கு விரைந்தது. இதில், தற்போது வரை 8 இந்தியர்களையும், இலங்கையை சேர்ந்தவர் ஒருவரையும் போர்க்கப்பல் மீட்டிருக்கிறது. இது குறித்து அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகியிருக்கிறது. அதில், “கடந்த ஜூலை 15ம் தேதி, ஓமன் கடற்கரையில் கவிழ்ந்த கொமரோஸ் நாட்டு எண்ணெய் கப்பலில் பயணம் செய்த 8 இந்தியர்கள் மற்றும் ஒரு இலங்கையர் உட்பட 9 மாலுமிகளை இந்திய கடற்படையின் போர்க்கப்பலான INS Teg மீட்டுள்ளது. கப்பலில் மொத்தம் 13 இந்தியர்கள் இருந்தனர். இந்திய கடற்படை மற்றும் ஓமான் மீட்புப் படையினர் இன்னும் அப்பகுதியில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்திய கடற்படையும் அதன் கடல்சார் கண்காணிப்பு விமானமான P-8I, தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Readmore: இல்லத்தரசிகளே குட்நியூஸ்!. ஒரே நாளில் தக்காளி விலை ரூ.60ஆக சரிந்தது!