திண்டுக்கல் மாவட்ட பகுதியின் அருகே சீலப்பாடி ஊராட்சியைச் சேர்ந்த 65 வயது முதியவர் நேற்றைய தினத்தில் உன்னிக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.
பரிசோதனையில் அவருக்கு உன்னி காய்ச்சல் இருப்பது உறுதியானது. அவரது இறப்புக்கு காய்ச்சல் மட்டும் காரணம் இல்லை என்றும், சிறுநீரகம், கல்லீரல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் அவர் இறந்திருக்கலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட ரவுண்ட் ரோடு, மரியநாதபுரம், ஆர்.எம்.காலனி, மேட்டுப்பட்டி, பகுதிகளை சேர்ந்த 8 பேர் உன்னி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திண்டுக்கல் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாநகராட்சி நகர் நல அலுவலர்கள் கூறுகையில், ”உடல் வலியுடன் காய்ச்சல், உடல் முழுவதும் சிறு, சிறு தடுப்பு இருப்பது தான் இதன் அறிகுறி. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பீதியடைய வேண்டாம்.
முழு மீட்பு அடைய, 15 நாட்களுக்கு மருந்து எடுத்துக் கொள்ளுங்கள். வடிகால் மற்றும் பொது இடங்களில் உணவு பொருட்கள் மற்றும் கழிவுகளை வீசுவதை தவிர்க்கவும், கொசு மருந்துகளை தெளிக்கவும் .