fbpx

எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!! ரூ.13 லட்சத்துடன் வெளியேறிய போட்டியாளர்..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடந்த சீசனை விட இந்த சீசன் மிகவும் பரபரப்பாகவும் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாமலும் சென்று கொண்டிருக்கிறது.

தற்போது 91 நாட்களைக் கடந்தாலும் வெற்றியாளர் யார் என்பதை இன்னும் கணிக்கவே முடியாமல் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து ரவீனா மற்றும் நிக்சன் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில், வழக்கம்போல 14-வது வாரத்தில் பணம் பெட்டியை எடுத்துக்கொண்டு ஒருவர் வெளியேறலாம். இந்த வாரம் மற்றவர்களை முந்தி நடிகை விசித்ரா ரூ.13 லட்சம் இருந்த பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Chella

Next Post

தமிழ்நாட்டிற்கு கனமழை எச்சரிக்கை..!! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா..?

Thu Jan 4 , 2024
தமிழ்நாடு, புதுச்சேரியில் ஜனவரி 10ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நீடித்து வரும் நிலையில், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு, புதுச்சேரியில் வரும் ஜனவரி 10ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல் […]

You May Like