திருப்பதி கோயில் உண்டியல் காணிக்கை வரலாறு காணாத உச்சம் தொட்டுள்ளது..
ஆந்திர மாநிலத்தின் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.. திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வகித்து வரும் இந்த கோயில் எப்போதுமே விழாக்கோலம் பூண்டிருக்கும்.. கோயில் பராமரிப்பு பணிகள், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை தேவஸ்தானம் செய்து வருகிறது.

இந்த சூழலில் கோடை விடுமுறை முடிவடைந்திருந்தாலும், திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.. கடந்த சில நாட்களாகவே திருப்பதியில் அதிகமானோர் கூடியுள்ளதால் சாமி தரிசனம் செய்ய 20 மணி நேரத்திற்கு மேலாவதாக கூறப்படுகிறது.. இந்நிலையில் திருப்பதி கோயில் உண்டியல் காணிக்கை வரலாறு காணாத உச்சம் தொட்டுள்ளது.. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு, ஒரே நாளில் ரூ.6.8 கோடி காணிக்கையை பக்தர்கள் உண்டியலில் செலுத்தியுள்ளனர். ரூ.6 கோடிக்கு மேல் காணிக்கை வருவது இதுவே முதன்முறையாகும்.. இதற்கு முன்னர் 2012 ஏப்ரல் 1ம் தேதி பக்தர்கள் செலுத்திய ரூ.5.73 கோடியே அதிகபட்ச காணிக்கையாக இருந்தது குறிப்பிடத்தக்கது..