fbpx

வழக்கத்திற்கு மாறான நிகழ்வு… பூமியின் சுழற்சியில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்..

ஜூலை 29-ம் தேதி, பூமி தனது நிலையான 24 மணி நேர சுழற்சியை விட 1.59 மில்லி விநாடிகளில் முழு சுழற்சியை முடித்தது..

பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு, சூரியனையும் சுற்றி வருவது நாம் அனைவரும் அறிந்தது தான். அப்படி தன்னை தானே சுற்றி வர 24 மணி நேரத்தை பூமி எடுத்துக்கொள்கிறது. இதோடு மட்டுமல்லாமல் புவி சூரியனையும் சுற்றி வருகிறது. புவி சூரியனைச் சுற்ற 365 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. அந்த 24 மணி நேரத்தில் 12 மணி நேரம் சூரியனை நோக்கி இருக்கும் பகுதி பகல். மற்ற பகுதி சூரிய ஒளியின்மையால் இரவு ஏற்படுகிறது. 12 மணி நேரம் பகல், 12 மணி நேரம் இரவை சேர்த்து ஒரு நாள். இதனால் தான் இரவு பகல் ஏற்படுகின்றன. அதே நேரத்தில், பகல் மற்றும் இரவு காலம் எப்போதும் சமமாக இருக்காது. சில நேரங்களில் பகல் பொழுது அதிகமாக இருக்கலாம்.

பூமியின்

சில நேரங்களில் பகல் பொழுது குறைவாகவும், இரவு பொழுது அதிகமாகவும் இருக்கலாம். இது பூமியின் அச்சின் சாய்வால் ஏற்படுகிறது. பூமி சுழலும் போது, ​​ஒன்று வடக்கிலும் மற்றொன்று தெற்கிலும், இரண்டு புள்ளிகள் உருவாகின்றன, அவை ஒரு நேர் கோட்டில் இணைந்தால், ஒரு அச்சை உருவாக்குகின்றன. பூமி அதன் 66 டிகிரி கோணத்தில் சுழல்கிறது, இதன் காரணமாக அதன் அச்சு நேராக இல்லாமல் 23 டிகிரிக்கு சாய்ந்துள்ளது. அச்சின் சாய்வின் காரணமாக, இரவும் பகலும் பெரியதாகவும் சிறியதாகவும் இருக்கும்.

இதனிடையே கடந்த 29ஆம் தேதி வழக்கத்திற்கு மாறாக 1.59 மில்லி விநாடிகள் முன்னதாகவே பூமி தனது சுழற்சியை நிறைவு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன… இதனால் மிகக் குறுகிய நாள் என்ற சாதனை படைக்கப்பட்டு உள்ளது. வெறும் 1.59 விநாடி நமக்கு பெரிய விஷயம் இல்லை என்று தோன்றினாலும், இது பூமியின் சுழற்சியில் மிகவும் முக்கியமான விநாடிகள் என்று எச்சரிக்கின்றனர் ஆய்வாளர்கள்.

பூமி சுற்றும் வேகம் அதிகரிப்பது இதுமுதன்முறையல்ல.. கடந்த 2020ஆம் ஆண்டு, ஜூலை 19ஆம் தேதி மிகவும் குறுகிய நாள் பதிவானது. வழக்கமான 24 மணிநேர நாளை விட 1.47 மில்லி விநாடிகள் குறைவாக இருந்தது. அதாவது அன்றைய தினம் பூமி வழக்கத்தைக் காட்டிலும் வேகமாகச் சுற்றி உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இது 1960ஆம் ஆண்டுக்குப் பின்னர் நடந்த நிகழ்வு என்றும் கூறுகின்றனர்..

இந்தச் சூழலில் தற்போது மீண்டும் ஒரு குறுகிய நாள் பதிவாகி உள்ளது. வரும் நாட்களில் நாட்கள் மேலும் குறுகியதாக மாறலாம் என்றும் அதற்கான தொடக்கமாக இது இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.. எனினும் பூமி சுழற்சியின் வேகம் அதிகரிப்பதற்கு என்ன காரணம் என்பது இதுவரை தெளிவாக தெரியவில்லை.. பூமியின் மையப் பகுதி அல்லது வெளிப்புற அடுக்குகள், கடல்கள், அலைகளில் ஏற்படும் மாற்றம் காரணமாக இது நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது..

பூமி சுழலும் வேகம் தொடர்ந்து அதிகரித்தால், அது நெகடிவ் லீப் வினாடிகளுக்கு வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது. அதாவது பூமி சூரியனைச் சுற்றி வரும் விகிதத்திற்கும் கடிகாரங்களுக்கும் பொருந்தாமல் போகலாம்.. இதுபோன்ற லீப் வினாடிகள் ஸ்மார்ட்போன்கள், கணினிகள், மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளுக்கு குழப்பமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது..

Maha

Next Post

நண்பனை தூங்க வைத்து; தலையில் கல்லை தூக்கி போட்ட கொடூர செயல்..?

Mon Aug 1 , 2022
சென்னை அருகே பல்லாவரம், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் சின்னதுரை (29). இவர் பெயிண்ட் அடிக்கும் கூலித்தொழிலாளி. சின்னதுரைக்கு திருமணமாகி மனைவி, இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இப்போது சின்னதுரை மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். தினமும் பகலில் வேலைக்கு செல்லும் சின்னதுரை, இரவில் பம்மல் பிரதான சாலையில் உள்ள நடைபாதையில் படுத்து உறங்குவது வழக்கம். அப்போது அதே இடத்தில் படுத்து உறங்கும் மதுரையைச் சேர்ந்த ராஜா(44) […]

You May Like