fbpx

அரசுப்பள்ளி மாணவர்கள் 80 % பேர் தோல்வி..‌‌.! தமிழக அரசு தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்..‌.! அன்புமணி ராமதாஸ் அதிரடி

நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்கள் 80 விழுக்காடு தோல்வி அடைந்துள்ளதற்கு மாநில அரசே பொறுப்பேற்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் தமிழ்நாட்டின் தேர்ச்சி விகிதம் கணிசமாக குறைந்திருப்பது வருத்தமளிக்கிறது. குறிப்பாக இத்தேர்வில் பங்கேற்ற அரசுப்பள்ளி மாணவர்களில் 80 விழுக்காட்டினர் தோல்வியடைந்திருப்பது வேதனையளிக்கிறது. மருத்துவப்படிப்பில் சேரும் அளவுக்கு இல்லாவிட்டாலும், நீட் தேர்வில் வெல்லும் அளவுக்குக்கூட அரசுப்பள்ளி மாணவர்கள் தயார்படுத்தப்படாதது கண்டிக்கத்தக்கது.

2022-ஆம் ஆண்டு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் 51.20% மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். இது தேசிய சராசரியான 56.30 விழுக்காட்டை விட 5.10% குறைவு ஆகும். 2020-ஆம் ஆண்டில் 57.40% ஆகவும், 2021-ஆம் ஆண்டில் 54.40% ஆகவும் இருந்த நீட் தேர்ச்சி விகிதம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நடப்பாண்டிலும் குறைந்து இருப்பது வருத்தமளிக்கிறது. மாணவர்களின் மதிப்பெண் விகிதமும் பெருமளவில் குறைந்திருக்கிறது என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

கனிமச் சலுகை விதிகள்m...! மத்திய நிலக்கரி அமைச்சகம் குற்றமற்றதாக்கியுள்ளது...!

Sat Sep 10 , 2022
விதிமுறைகளை குற்றமற்றதாக்கும் வகையில், கனிமச் சலுகை விதிகள் 1960-ல் மத்திய நிலக்கரி அமைச்சகம் திருத்தம் மேற்கொண்டுள்ளது.அரசின் கொள்கையின்படி, எளிதாக வர்த்தகம் செய்வதை மேலும், ஊக்கப்படுத்துவதற்காக 68 விதிமுறைகளை குற்றமற்றதாக்கி திருத்தம் செய்துள்ளது. 10 விதிமுறைகளுக்கு அபராதமும் குறைக்கப்பட்டுள்ளது. தாமதமான வாடகைக் கட்டணம், ராயல்டி, கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகைக்கான வட்டி 24 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் நிலக்கரி சுரங்கத்துறையில் தேவையான பொருளாதார தளர்வுகளை ஏற்படுத்தும் […]

You May Like