கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு கிட் காட் ஓஎஸ் பயன்படுத்தி வரும் போன்களுக்கு வழங்கி வரும் சேவைகளை 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு நிறுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துபவர்களுக்கு 1 சதவீதத்திற்கும் குறைவானவர்களே கிட் காட் ஓஎஸ் பயன்படுத்தி வருகிறார்கள். ஆண்ட்ராய்டு கிட் காட் ஓஎஸ் சேவையை பயன்படுத்துபவர்களால் ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு பிளே ஸ்டோர், கூகுள் ஆப்கள் போன்றவற்றைப் பயன்படுத்த முடியாமல் போகும். மேலும், தொடர்ந்து ஆண்ட்ராய்டு கிட் காட் ஓஎஸ் உள்ள போன்களை பயன்படுத்தும் போது பல்வேறு தரவு பாதுகாப்பு சிக்கல்கள் ஏற்படும். முடிந்தவரையில் அந்த ஆண்ட்ராய்டு கிட் காட் ஓஎஸ்-ஐ அப்டேட் செய்ய வேண்டும். அப்படி முடியவில்லை என்றால் புதிய ஆண்டிராடு போன் வாங்குவது நல்லது என கூகுள் தெரிவித்துள்ளது.
முன்னதாக இதே போன்று 2021-ம் ஆண்டு ஆண்ட்ராய்டு ஜெல்லி பீன் ஒஎஸ் ஏபிஐ 16 மற்றும் 18-க்கான அப்டேட்களை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது. ஆண்ட்ராய்டு ஓஸ்-ஐ உருவாக்கிய ஆண்டி ரூபின், ரிச் மைனர், நிக் சியர்ஸ் மற்றும் கிறிஸ் வைட் உள்ளிட்டவர்கள் ஆரம்ப கட்டத்தில், ஆண்ட்ராய்டு ஒஎஸ் வெர்ஷன்களுக்கு தங்களுக்கு பிடித்த உணவுகள், சாக்லேட்கள் பெயரை பயன்படுத்தி, ஆண்டிராய்டு ஜெல்லி பீன், கிட்காட் என பெயரிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 2003-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஆண்ட்ராய்டு நிறுவனத்தை கூகுள் நிறுவனம் 2005-ம் ஆண்டு வாங்கியது குறிப்பிடத்தக்கது.