fbpx

மாணவர்களே…!வெளியானது செமஸ்டர் தேர்வு முடிவுகள்…! ரூ.300 கட்டணம் செலுத்த வேண்டும்…! தேர்வுத்துறை அறிவிப்பு…!

முதுகலை பொறியியல் படிப்பிற்கான செமஸ்டர் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

இது குறித்து பல்கலைக்கழக தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்; முதுகலை பொறியியல் படிப்பிற்கான தேர்வு முடிவுகளை coe1.annuniv.edu, coe2.annauniv.edu ஆகிய இணைய முகவரியில் முடிவுகளை அறியலாம். ஏப்ரல், மே மாதம் நடைபெற்ற எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க் மற்றும் பிஎச்.டி படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் அந்தந்த கல்லூரிகள் மூலமாக இணைய முறையில் வரும் 6-ம் தேதிக்குள் 300 ரூபாய் செலுத்தி தங்களுடைய விடைத்தாள் நகலை பெற வேண்டும் எனவும்; விடைத்தாள் நகலை சம்பந்தப்பட்ட பாடங்களின் பேராசிரியர்கள் சரிபார்த்த பிறகு மதிப்பெண் கூடுதலாக வழங்குவதற்கு உகந்தது எனக் கருதினால் மட்டுமே மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

குழந்தைகள் வைத்திருப்போர் கவனத்திற்கு..! தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்.. மிஸ் பண்ணிடாதீங்க..

Wed Jan 4 , 2023
தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெறவுள்ளது, 5வயது வரை உள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் இதை தவற விட வேண்டாம். ஆண்டுதோறும் புதிதாக பிறந்த குழந்தை முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து இரண்டு முறை வழங்கப்பட்டு வருகிறது. போலியோ இல்லாத இந்தியாவை உருவாக்க மத்திய அரசு போலியோ சொட்டு மருந்து முகாம்களை நடத்தி வருகிறது. பொதுவாக இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் […]

You May Like