fbpx

அண்ணாமலைக்கு சிக்கல்..!! தலைவர் பதவி பறிபோகிறதா..? மீண்டும் தமிழிசையா..? கூட்டத்தில் கேட்ட கோஷம்..!! செம டென்ஷனாம்..!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் தலைவர் பதவி கடந்த ஜூலை மாதத்துடன் முடிவடைந்த நிலையில், மீண்டும் அண்ணாமலையே தலைவராவாரா? இல்லை வேறு யாருக்கும் தலைவர் பதவி வழங்கப்படுமா? என்ற கேள்வி கட்சி தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த சூழலில் மாநிலத் தலைவர் பதவி குறித்து கமலாலயத்தில் கடந்த டிசம்பர் 16ஆம் தேதி விவாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தில், மாநிலத் தலைவராக அண்ணாமலையை மீண்டும் கொண்டுவர நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என சிலர் பேசியதாகவும், இதனால் தமிழிசை செளந்தரராஜன், பொன் ராதாகிருஷ்ணன், அரவிந்த் மேனன் போன்றவர்கள் கோபமடைந்ததாகவும் கூறப்படுகிறது. கட்சியின் அடிமட்ட தேர்தலையே நாம் இன்னும் முழுவதுமாக நடத்தி முடிக்கவில்லை. அதற்குள் மாநிலத் தலைவர் தேர்தலைப் பத்தி பேச தொடங்கிவிட்டடீர்களா? தலைமை யார் பெயரைச் சொல்கிறதோ, அவரையே மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் போறோம். அதுக்குள்ள இங்க பிரச்சாரத்தை ஆரம்பிச்சுறாதீங்க’ எனக் கடுகடுத்தகாச் சொல்லப்படுகிறது.

அடுத்த மாநில தலைவர் யார்..?

அமைதியாக இருந்த அண்ணாமலை, ‘முதல்ல, மண்டல தலைவர் தேர்தலை நடத்தி முடிப்போம். யார், யாருக்கு உரிய அங்கீகாரம் தர வேண்டும் என்பதை தலைமை பார்த்துக்கொள்ளும்’ என்று பேசி கூட்டத்தை முடித்தாராம். ஆனால், தேசிய தலைமை அண்ணாமலைக்கு தான் பதவி கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக சொல்கின்றனர். ஆனால், முன்புபோல டெல்லியில் செல்வாக்குடன் அண்ணாமலை இல்லை என்ற பேச்சும் அடிபடுகிறது.

பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு, ஒருமுறைகூட அவரை நேரில் சந்தித்து அண்ணாமலை பேசவில்லை என்று கூறப்படுகிறது. அண்ணாமலைக்கு நெருக்கமான தேசிய அமைப்புப் பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ்கூட, முன்புபோல அவருடன் நெருக்கமாக இல்லை என சொல்கின்றனர். அண்ணாமலைக்கும் டெல்லிக்கும் இடையே விழுந்த விரிசலை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, மீண்டும் மாநிலத் தலைவராகக் தமிழிசை கடுமையாக முயற்சிப்பதாக கூறப்படுகிறது. நயினார் நாகேந்திரன், கருப்பு முருகானந்தம், வினோஜ் பி.செல்வம், வானதி சீனிவாசன் போன்ற சீனியர்களும் தலைவர் பதவிக்கான போட்டியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read More : பள்ளியில் பலாத்காரம்..!! கல்லூரியில் குழந்தை பெற்றெடுத்த மாணவி..!! ஆசிரியர் செய்த கேவலமான செயல்..!!

English Summary

With the term of Annamalai’s chairmanship ending last July, the question has arisen among party workers as to whether Annamalai will be the chairman again or whether someone else will be given the chairmanship.

Chella

Next Post

”காலி குடம் உருண்டால் சப்தம் அதிகமாகத்தான் இருக்கும்”..!! எடப்பாடி பழனிசாமியை கடுமையாக சாடிய முதலமைச்சர் முக.ஸ்டாலின்..!!

Fri Dec 20 , 2024
Chief Minister MK Stalin has said that the AIADMK government is the one who created the biggest man-made disaster by opening the Chembarambakkam lake.

You May Like