Annamalai | செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில், அண்ணாமலை தனது என் மண் என் மக்கள் நடைபயணத்தை மேற்கொண்டு உரையாற்றினார். அப்போது, ”பஞ்சுமிட்டாயை தடை செய்த அரசு, டாஸ்மாக்கை தடை செய்யுமா? என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பாஜக செய்தி தொடர்பாளர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “கூட்டணி தொடர்பாக பாஜகவின் கதவுகள் மட்டுமல்ல, ஜன்னல்கள் கூட திறந்திருப்பதாக கூறினார். பிரதமர் மோடி வருகிற 27ஆம் தேதி மதியம் 2 மணிக்கு தமிழ்நாடு வரவுள்ளதாகவும் அண்ணாமலை கூறினார். மேலும் , அடுத்த சில நாட்களில் தமிழ்நாட்டின் முக்கிய புள்ளிகள் பாஜகவில் இணையவிருப்பதாக அண்ணாமலை தெரிவித்தார்.
இணையவிருப்பவர்கள் முக்கிய புள்ளிகள் மட்டுமல்லாது பெரும்புள்ளிகள் எனவும் விளக்கம் அளித்தார். அதோடு இணையவிருக்கும் பெரும்புள்ளிகள், அதிகாரம் மிக்க பொறுப்புகளில் உள்ளவர்கள் எனவும் அவர் சூசகமாகத் தெரிவித்துள்ளார். அதனால் பாஜகவில் இணையவிருப்பவர்கள் சிட்டிங் எம்எல்ஏ-க்களில் எவரேனுமாக இருக்கலாம் என அரசியல் வட்டாரத்தில் தற்போது பேச்சு எழுந்துள்ளது.
Read More : Kamal Haasan | மக்களவை தேர்தலில் கூட்டணியா..? தனித்து போட்டியா..? இன்று அறிவிக்கிறார் கமல்..!!