கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் அருகேயுள்ள முள்ளங்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான் ஐசக் (4)0 இவர் பிளம்பிங் காண்ட்ராக்டராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சந்தியா (34). இவர்களுக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. 10 வருடங்களாக இவர்களுக்கு குழந்தை இல்லை என்பதால் மிகுந்த மன வருத்தத்துடன் வாழ்ந்து வந்துள்ளனர். இதற்கிடையில் குழந்தை இல்லாத கவலையில், ஜான் ஐசக் குடி போதைக்கு அடிமையாகி வேலைக்கு வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.
இதன் காரணமாக வருமானம் இல்லாததால், குடும்பத்தில் கடன் சுமை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் சந்தியாவின் தாயார் காந்தி என்பவரது வீட்டிற்கு சென்று தன்னை திருமணம் செய்வதாக செய்து கொள்வதாக கூறி தன்னிடமிருந்து ரூபாய் 30 லட்சம் வரை பணமாக பெற்றுள்ளார் என்றும், அந்த பணத்தை திருப்பிக் கொடுக்காவிட்டால் காவல்துறையில் புகார் செய்வதாகவும் கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனை அடுத்து, காந்தி தனது மகள் சந்தியாவை செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். பலமுறை முயற்சித்தும் போனை யாரும் எடுக்காத நிலையில் சந்தேகம் அடைந்த காந்தி, சந்தியாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த சமயத்தில் வீடு பூட்டி இருந்ததால், வீட்டின் ஜன்னலை திறந்து அதன் வழியாக உள்ளே பார்த்துள்ளார். அப்போது அவரது மகள் சந்தியா தூக்கில் பிணமாக தொங்கிய நிலையிலும், ஜான் ஐஸக் விஷம் குடித்த நிலையில் கட்டிலில் பிணமாக கிடந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார்.
சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்ததில் இருவரும் தற்கொலை செய்து கொண்டது உறுதியானது. இதனைத் தொடர்ந்து, குலசேகரம் காவல் நிலையத்திற்கு தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், கணவன் மற்றும் மனைவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இரட்டை தற்கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த குலசேகரம் காவல்துறையின,ர் அவர்களின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.