fbpx

அண்ணாமலை பங்கேற்ற நிகழ்ச்சியில் குடித்துவிட்டு மட்டையான பாஜக பிரமுகர்..! தூக்கிச் செல்லும் தொண்டர்கள்..!

குடிபோதையில் நடக்க முடியாமல் இருந்த மாதப்பூர் பஞ்சாயத்து தலைவரை பாஜகவினர் தூக்கி சென்ற காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த மாதப்பூர் பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் அசோக்குமார். பாஜகவைச் சேர்ந்த இவர் மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார். கடந்த 17ஆம் தேதி பல்லடம் ராயர்பாளையத்தில் பாஜவின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட, மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், மாதப்பூர் பஞ்சாயத்து தலைவருமான அசோக்குமார் கலந்து கொண்டார்.

கூட்டத்தை முடித்து கட்சித் தொண்டர்களுடன் சென்ற மாதப்பூர் பஞ்சாயத்து தலைவர் அசோக்குமார், பொங்கலூர் அருகே உள்ள தனியார் உணவு விடுதியில் மது அருந்த சென்றுள்ளார். அங்கு போதை தலைக்கேறிய நிலையில், அவர் நடக்க முடியாமல் இருந்துள்ளார். உணவருந்த நண்பர்கள் அழைத்த நிலையில், போதை தலைக்கேறியதால், எழுந்து செல்ல முடியாமல் இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவருடன் வந்த கட்சி தொண்டர்கள் நடக்க முடியாத அவரை தூக்கி செல்கின்றனர். தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.

Chella

Next Post

சொத்து தகராறு.. அண்ணியை அரிவாள் மனையால் வெட்டிய கொழுந்தன்..!

Wed Jul 20 , 2022
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள நாவலூர் கிராமத்தில் குடியிருப்பவர் காவேரி. இவரது கணவர் இறந்து விட்டதால் காவேரி பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இவருக்கும் இவரது கணவரின் சகோதர, சகோதரிக்கும் இடையே சொத்து தொடர்பான பிரச்சனை நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று மதியம் காவிரியின் கணவரின் தம்பி சுப்பிரமணியனுக்கும், காவிரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.இந்த தகராறு கைகளப்பாக மாறியதால் காவிரியை அங்கிருந்த அரிவாள்மனையால் சுப்பிரமணியன் வெட்டியதில், தலை […]

You May Like