தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு இருப்பதற்கு பிரதமர் மோடி தான் காரணம் என அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் பாதயாத்திரை மேற்கொண்டார். இந்த பாதயாத்திரையின் நிறைவு விழா திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மேடையில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ”அடுத்த பிரதமர் யார் என்று தெரிந்து வாக்களிக்கும் தேர்தல் இது. ஆனால், அது 400 அல்லது அதற்கு மேலாக என்பது தான் கணக்கு. வேல் யாத்திரை 4 சட்டமன்ற உறுப்பினர்களை கொடுத்தது. இந்த பாதயாத்திரை 40 பாராளுமன்ற உறுப்பினர்களை கொடுக்க போகிறது. சரித்திரத்தில் நாம் இடம் பெற்றுள்ளோம். இத்தனை ஆண்டு காலம் எதற்காக காத்திருந்தோமோ அதை கண்டிருக்கிறோம்.
Read More : விஜய் டிவியுடன் பஞ்சாயத்து..!! வேறு சேனலுக்கு தாவிய வெங்கடேஷ் பட், தாமு..!! அப்படினா CWC..?
அடுத்த 60 நாட்கள் முழு அர்ப்பணிப்போடு உழைக்க வேண்டும். தமிழ்நாட்டில் இருந்து 39 எம்.பி-க்களை அனுப்பி வைக்கும் வரை நமக்கு ஓய்வில்லை. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு இருப்பதற்கு பிரதமர் மோடி தான் காரணம். 2019ஆம் ஆண்டு செய்த தவறை தமிழ்நாடு மீண்டும் செய்ய போவதில்லை. வரும் மக்களவைத் தேர்தலில் 450 உறுப்பினர்களை பெற்று மோடி மீண்டும் பிரதமராவார்” என கூறினார்.
English Summary : Annamalai has said that Prime Minister Modi is the reason for Jallikattu in Tamil Nadu.