புஷ்பா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘புஷ்பா 2’. இப்படத்தில் தேசிய விருது வென்ற நடிகர் அல்லு அர்ஜுன் சந்தன கடத்தல்காரர் புஷ்பா ராஜாகவும் மற்றும் அவரது மனைவியாக நடிகை ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீ வள்ளி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். படம் எடுக்கப்பட்டது என்னவோ 400 கோடிக்கு தான் ஆனால், 1200 கோடிகள் வசூல் செய்து தயாரிப்பாளர்களுக்கு பெரிய லாபத்தை கொடுத்துள்ளது.
வெளியான 2 நாட்களிலே படத்தின் பட்ஜெட்டுக்காக செலவு செய்த தொகையையும் மீட்டுக்கொடுத்துவிட்டது. இன்னும் சில தினங்களில் படம் 1500 கோடி வசூலையும் கடந்துவிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், புஷ்பா 2 படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி கன்னடம் என பல மொழிகளில் படத்தை வெளியிட படத்தின் ஓடிடி உரிமையை பெற்ற நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Read more: “விஜய்யை பிரிந்து சென்ற சங்கீதா…” பத்திரிகையாளர் அளித்த பரபரப்பு பேட்டி.. சோகத்தில் ரசிகர்கள்..