கோடை வெயிலின் காரணமாக 6 முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு, முன்கூட்டியே ஆண்டு இறுதி தேர்வை நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது..
நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது.. கடுமையான வெயிலை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர்.. இந்த சூழலில் ஏப்ரல், மாதங்கள் இயல்பை விட அதிகமாக வெப்பம் பதிவாகக்கூடும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் வெயிலின் காரணமாக தற்போது 6 முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு, முன்கூட்டியே ஆண்டு இறுதி தேர்வை நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது..
தமிழகம் முழுவதும் 6 முதல் 9 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 24 ஆம் தேதி தொடங்கி மாத இறுதிவரை ஆண்டு இறுதி தேர்வுகளை நடத்தப் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்திருந்தது. இந்நிலையில், இந்த தேர்வுகளை வரும் 11ஆம் தேதி தொடங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.. மெலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு தேதியில் தேர்வுகளைத் தொடங்கி, ஒரே வாரத்திற்குள் நிறைவடையும் வகையில் தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.. அதன்படி சென்னையில் வரும் 18ஆம் தேதி முதல் தேர்வுகள் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன..