fbpx

மத்திய அரசு ஊழியர்களுக்கு மற்றொரு குட்நியூஸ்.. 18 மாத அகவிலைப்படி நிலுவைத்தொகை… விரைவில் முக்கிய அறிவிப்பு…

மத்திய அரசு ஊழியர்களின் 18 மாத அகவிலைப்படி நிலுவைத்தொகை குறித்து நவம்பர் மாதம் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அல்லது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அகவிலைப்படி (DA) வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் 4% அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. எனவே தற்போது 34 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 38%ஆக உயரும்.. கடந்த ஓராண்டில், வீட்டு வாடகை கொடுப்பனவுக்கான (HRA) வருடாந்திர அகவிலைப்படியில் பெரிய திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், 2020 ஜனவரி முதல் ஜூன் 2021 வரை சிக்கியிருந்த டிஏ நிலுவைத் தொகை என்ன ஆனது என்பது அரசு ஊழியர்களின் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது..

மத்திய அரசு 2021, ஜூலை முதல் அகவிலைப்படியை 11 சதவீதம் உயர்த்தியுள்ளது. அதன்பிறகு, அகவிலைப்படி இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த அகவிலைப்படி உயர்வு இப்போது 34 சதவீதமாக உள்ளது. எனினும் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள்18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகைக்காக காத்திருக்கின்றனர். இந்த சூழலில் அவர்களுக்கு ஒரு முக்கியமான அப்டேட் வந்துள்ளது..

தேசிய கவுன்சிலின் செயலாளர் (பணியாளர் தரப்பு) ஷிவ் கோபால் மிஸ்ரா, அமைச்சரவை செயலாளர் மற்றும் தேசிய கவுன்சிலின் தலைவருக்கு ஒரு கடிதம் அனுப்பினார். இந்த கடிதத்தில் ஊழியர்களின் டிஏ நிலுவைத் தொகை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார். நவம்பர் மாதத்தில் இந்த விவகாரம் அமைச்சரவை செயலாளருடன் விவாதிக்கப்பட்டு லட்சக்கணக்கான ஊழியர்கள் தங்களின் அகவிலைப்படி நிலுவைத் தொகையைப் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் தற்போது இது குறித்து அரசு தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இதனிடையே அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தின் நிலுவைத் தொகை வழங்காததால், ஊழியர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அரசாங்கத் தரவுகளின்படி, ஊழியர்களின் 11 சதவீத டிஏவை நிறுத்தியதன் மூலம் அரசாங்கம் ரூ.40,000 கோடி செலவு குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

தமிழகம் முழுவதும்.. பாட்டில், கேன்களில் பெட்ரோல், டீசல் வழங்கப்பட்டாது.. அதிரடி அறிவிப்பு..

Mon Sep 26 , 2022
தமிழ்நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் பாட்டில், கேன்களில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்வது நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 3 நாள்களாக பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. இதனால், தமிழ்நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் பாட்டில், கேன்களில் பெட்ரோல், டீசல் வழங்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.. தமிழ்நாட்டில் […]

You May Like