fbpx

குடும்ப தலைவிகளுக்கு மேலும் ஒரு குட் நியூஸ்..!! தீபாவளிக்கு 2 சிலிண்டர்கள் இலவசம்..!! வெளியான அறிவிப்பு..!!

உத்தரப்பிரதேச பாஜக அரசு தனது தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு ஆண்டுக்கு 2 இலவச எல்பிஜி சிலிண்டர்களை வழங்குவதாக கூறியிருந்தது. இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, இந்த தீபாவளி முதல் பெண்களுக்கு 2 இலவச சிலிண்டர்கள் வழங்கும் திட்டம் தொடங்க உள்ளது. இத்திட்டம் தொடர்பான வழிகாட்டுதல்களை தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ளார்.

அதன்படி, உஜ்வாலா திட்டத்தின் கீழ், வரும் தீபாவளியன்று அரசு பயனாளிகளுக்கு ஒரு இலவச சிலிண்டரையும், ஹோலி பண்டிகைக்கு மற்றொரு இலவச சிலிண்டரையும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முழு ஏற்பாடுகளையும் யோகி அரசு தற்போது செய்துள்ளது. உத்தரபிரதேசத்தில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சுமார் 1.75 கோடி எரிவாயு சிலிண்டர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இனி, இந்த பயனாளிகளுக்கு ஆண்டுக்கு 2 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. தீபாவளியை முன்னிட்டு, முதல்முறையாக கேஸ் சிலிண்டர்களுக்கான பணம் கேஸ் இணைப்பு வைத்திருப்பவர்களின் வங்கி கணக்குகளுக்கு மாற்றப்படவுள்ளது. முன்னதாக கடந்த சட்டசபை முன்னிட்டு ஹோலி மற்றும் தீபாவளியன்று பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் வழங்குவதாக தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது.

Chella

Next Post

காசா மருத்துவமனை தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம்..!

Wed Oct 18 , 2023
காசா மருத்துவமனையின் மீது இஸ்ரேல் நடத்திய விமான தாக்குதலில் 500 பேர் உயிரிழந்ததையடுத்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 7-ம் தேதி பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலின் தெற்கு பகுதி மீது தரை, கடல், வான் வழியாக தாக்குதல் நடத்தினர். அன்றைய தினம் இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து 5,000-க்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டன. சுமார் 1,200 ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் நுழைந்து […]

You May Like