fbpx

குட் நியூஸ் மக்களே…! சொத்து வரி செலுத்த மேலும் ஒரு மாதம் கால அவகாசம் நீட்டிப்பு…! எப்படி செலுத்துவது…?

சொத்துவரினை தனிவட்டி இல்லாமல் செலுத்த மேலும் ஒரு மாதம் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

2022-23ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டில், சொத்துவரி பொது சீராய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் அரையாண்டிற்கான சொத்துவரி பொது சீராய்வின்படி சொத்து உரிமையாளர்களால் ஆக்டோபர் 1-ம் தேதி முதல் செலுத்தப்பட்டு வருகிறது.

தாமதமாக சொத்துவரி செலுத்தும் சொத்து உரிமையாளர்கள் செலுத்த வேண்டிய தொகையுடன் கூடுதலாக 2 சதவீதம் தனிவட்டி சேர்த்து செலுத்த வேண்டும். எனினும் சொத்துவரி பொது சீராய்வின்படி உயர்த்தப்பட்ட சொத்துவரியினை இதுவரை செலுத்தாத சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்துவரி மதிப்பீட்டிற்குரிய உயர்த்தப்பட்ட சொத்துவரியினை தனிவட்டி இல்லாமல் செலுத்த நவம்பர் 15-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டது.

தற்போது, வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் அனைத் துறைகளும் மழை வெள்ள தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளில் முழுமையாக ஈடுபட்டுள்ள நிலையில், சொத்து உரிமையாளர்களின் நலன் கருதி, உயர்த்தப்பட்ட சொத்துவரியினை இதுநாள்வரை செலுத்தாதவர்கள், தனிவட்டிஇல்லாமல் சொத்துவரி செலுத்த அடுத்த மாதம் 15 தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்படும் சொத்துவரி ரசீதுகளில் உள்ள QR Code பயன்படுத்தியும், பெருநகர சென்னை மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in என்ற இணையதளம் மூலமாக, எவ்வித பரிமாற்ற கட்டணமில்லாமலும் செலுத்தலாம்.

Vignesh

Next Post

கவனம்...! வரும் 25-ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்...! மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க...!

Wed Nov 23 , 2022
தமிழக அரசு சார்பில் வரும் 25ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில்; தனியார்‌ துறை நிறுவனங்களும்‌ – தனியார்‌ துறையில்‌ பணிபுரிய விருப்பம்‌ உள்ள மனுதாரர்களும்‌ கலந்துக்கொள்ளும்‌ தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்‌ ஒவ்வொரு மாதத்தின்‌ இரண்டாம்‌ மற்றும்‌ 4-ம்‌ வெள்ளிக்கிழமைகளில்‌ நடைபெறுகிறது. எனவே, தனியார்துறை நிறுவனங்கள்‌ தங்களுக்குத்‌ தேவையான நபர்களை நேரடியாக தேர்வு செய்து […]

You May Like