செந்தில் பாலாஜி மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த மாதம் 14-ம் தேதி, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக கைது செய்தனர். ஆனால், கைது செய்யப்பட்ட உடனே நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை நேரில் பார்வையிட்டு, அவரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பணமோசடி பிரிவில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், புதிதாக ஊழல் தடுப்பு பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் முதற் கட்டமாக 300 நடத்துனர், ஓட்டுனர், ஊழியர்கள் ஆகியோருக்கு சம்மன் அனுப்பிய சென்னை மத்தியகுற்றப்பிரிவு போலீசார் மொத்தம் 1500 ஊழியர்களிடம் சம்மன் அனுப்பி விசாரிக்க தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 2014 முதல் 2015 ஆம் ஆண்டு வரை பணியமர்த்தப்பட்ட சுமார் 1500 பேரிடம் விசாரிக்கமத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளது.