Railway: இந்திய ரயில்வேயில் 1036 காலிப்பணியிடங்களுக்காக வெளியிடப்பட்ட வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 16ம் தேதிவரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியராக பணிபுரிய வேண்டும் என தங்களை தயார்படுத்தி வருபவர்களுக்கு இந்தியன் ரயில்வே அருமையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியன் ரயில்வேயின் கீழ் முதுகலை ஆசிரியர், பட்டதாரி பயிற்சி பெற்ற ஆசிரியர், தொடக்கப்பள்ளி ஆசிரியர் என சுமார் 700 மேற்பட்ட காலிப்பணியிடங்கள் தேசிய அளவில் நிரப்பப்படுகிறது. இவையில்லாமல் அறிவியல் மேற்பார்வையாலர், வழக்கறிஞர், நூலகர், ஆய்வக உதவியாளர் என 1036 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு கடந்த ஜனவரி 7ம் தேதி முதல் விண்ணப்பங்கள் தொடங்கியது. மேலும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 6ம் தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், விண்ணப்பிக்க பிப்ரவரி 16ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி பிப்ரவரி 17 ஆக திருத்தப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், தற்போது விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு கணினி வழி தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மொழிப்பெயர்ப்பு தேர்வு/ திறன் தேர்வு/ ஆசிரியர் திறன் தேர்வு ஆகியவை நடத்தப்படுகிறது. பின்னர் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ சோதனைக்கு பின்னர் பணி நியமனம் செய்யப்படும். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகள், பெண்கள், மூன்றாம் பாலினத்தவர், முன்னாள் ராணுவத்தினர்கள் ரூ.250 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் RRB-யின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும். முகப்புப் பக்கத்தில் கிடைக்கும் RRB அமைச்சக & தனிமைப்படுத்தப்பட்ட பிரிவுகள் ஆட்சேர்ப்பு 2025 இணைப்பைக் கிளிக் செய்யவும். விண்ணப்பதாரர்கள் பதிவு விவரங்களை உள்ளிட வேண்டிய புதிய பக்கம் திறக்கும். சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்து பக்கத்தில் உள்நுழையவும்.விண்ணப்பப் படிவத்தை நிரப்பி விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும். சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்து பக்கத்தைப் பதிவிறக்கவும். மேலும் தேவைக்கு அதன் அச்சிடப்பட்ட நகலை வைத்திருங்கள்.
Readmore: இறந்தவரின் ஆடைகளை வேறொருவர் அணியலாமா..? – கருட புராணம் கூறுவது இதோ..!