fbpx

Flash; சில்லரை விலையில் ரூ.15-ஐ   உடனடியாக அமலுக்கு வரும் வகையில் நடவடிக்கை…! மத்திய அரசு உத்தரவு

உணவு மற்றும் பொது விநியோகத் துறை,  கடந்த 6-ந்தேதி நடைபெற்ற  கூட்டத்தில், சமையல் எண்ணெயின் விலையை அதிகபட்ச சில்லரை விலையில் ரூ.15-ஐ   உடனடியாக அமலுக்கு வரும் வகையில் குறைக்கப்படுவதை உறுதி செய்யுமாறு முன்னணி சமையல் எண்ணெய் சங்கங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

விலைகுறைப்பு  எந்த வகையிலும் நீர்த்துப்போகாமல் இருக்க,  உற்பத்தியாளர்களும் சுத்திகரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களுக்கு விலையை உடனடியாக குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. உற்பத்தியாளர்கள்/சுத்திகரிப்பு செய்பவர்களால் விநியோகஸ்தர்களுக்கு விலை குறைப்பு ஏற்படும்போதெல்லாம், அதன் பயனை நுகர்வோருக்கு கிடைக்கச் செய்யவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மற்ற பிராண்டுகளை விட விலை அதிகமாக உள்ள, விலையைக் குறைக்காத சில நிறுவனங்கள், அவற்றின் விலையைக் குறைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மே மாதம்  முன்னணி சமையல் எண்ணெய் சங்கங்களுடன் துறை நடத்திய கூட்டத்தில்,  ஃபார்ச்சூன் சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் 1 லிட்டர் பேக்கின் விலை  ரூ.220-லிருந்து ரூ. 210 –ஆகக் குறைக்கப்பட்டது. சோயாபீன் மற்றும் கச்சி கானி எண்ணெய் 1 லிட்டர் பேக்கின் விலை ரூ.205- லிருந்து  ரூ. 195ஆக குறைக்கப்பட்டது.  சமையல் எண்ணெய்களின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்ததை அடுத்து, எண்ணெய் விலை குறைப்பு ஏற்பட்டது. குறைக்கப்பட்ட வரியின் முழுமையான பலன் நுகர்வோருக்கு மாறாமல் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு எண்ணெய் தொழில்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது.

Also Read: ரேஷன் அட்டையில் திருத்தம்…! இன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை மட்டுமே…! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!

Vignesh

Next Post

TANGEDCO: தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் மின்துறையில் வேலைவாய்ப்பு…! 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்…!

Sat Jul 9 , 2022
மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் தகுதி மத்திய அல்லது மாநில அரசு கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த பணியில் சேருவதற்கு முன் அனுபவம் எதுவும் தேவையில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் […]

You May Like