fbpx

ஏசி விபத்துகளை தடுக்க என்ன செய்ய வேண்டும்..? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்..

சென்னையில் பால் வியாபாரி ஒருவர் தனது அறையில் இருந்த ஏசி வெடித்ததில் உயிரிழந்தார். பலியானவர் 28 வயதான ஷியாம் என்றும், அவருக்கு 6 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது என்பதும் தெரியவந்துள்ளது.. இவரது மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று முன் தினம் இரவு 8 மணியளவில் பெரும் வெடிச் சத்தம் கேட்டது. மேல் வீட்டில் வசித்த அவரின் தந்தையும், தம்பியும் கீழே வந்து பார்த்த போது அறையில் தீப்பிடித்து எரிவதையும், அதிலிருந்து புகை வெளியேறுவதையும் கண்டனர். கதவை உடைத்து திறந்து பார்த்தபோது ஷ்யாம் உடல் கருகி உயிரிழந்தார்..

இதனையடுத்து குடும்பத்தினர் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.. ஷார்ட் சர்க்யூட் காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.. எனினும் ஏசி வெடிப்பதால் உயிரிழப்புகள் ஏற்படுவது இது முதன்முறையல்ல.. சமீபகாலமாக இந்த சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன..

இதுபோன்ற விபத்துகளை தடுக்க என்ன செய்ய வேண்டும்..?

  • ஒவ்வொரு ஆண்டும் பயன்படுத்துவதற்கு முன் ஏர் கண்டிஷனர்கள் சர்வீஸ் செய்யப்பட வேண்டும்.
  • ஏசி சேவைக்கு அங்கீகரிக்கப்பட்ட நிபுணர்களை மட்டுமே அழைக்க வேண்டும்.
  • ஏசி கேஸ் கசிவு ஏற்பட்டால், நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர்களை உடனடியாக அழைக்க வேண்டும்.
  • ஏசி பழுதடைந்தால் உண்மையான பாகங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
  • அங்கீகரிக்கப்பட்ட சேவை மையங்களில் இருந்து ஏசி எரிவாயு நிரப்பப்பட வேண்டும்.
  • ஏசிகளுடன் நல்ல தரமான கம்பிகள், ஸ்டேபிலைசர்கள் பயன்படுத்த வேண்டும்.

Maha

Next Post

மூன்றே மாதத்தில் காதல் கணவரின் செயலால்.. இளம் பெண் அதிர்ச்சி.. போலீசில் பரபரப்பு புகார்..!

Tue Aug 2 , 2022
சேலம் கன்னங்குறிச்சி காவல் நிலையம், சரகத்திற்குட்பட்ட 20 வயது இளம் பெண் ஒருவர் கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில், பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் அவர் கூறியிருபது, நானும், எங்கள் பகுதியில் வசிக்கும் 30 வயது வாலிபர் ஒருவரும் காதலித்தோம். இந்நிலையில் இருவரும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டோம். அதன்பிறகு என்னுடைய வீட்டில் என்னையும், என்னுடைய கணவரையும் ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில் […]

You May Like