Plane crash: அமெரிக்காவின் பிலடெல்பியா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானம் விபத்துக்குள்ளானதில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் பிராந்திய ஜெட் விமானம் ரொனால்ட் ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்திற்கு அருகே ராணுவ ஹெலிகாப்டருடன் மோதியதில் விபத்தில் 64 பேரும் உயிரிழந்தனர். கடந்த 25 வருட அமெரிக்க வரலாற்றில் நடந்த மிக மோசமான விமான விபத்தாக இந்த விபத்து கருதப்படும் நிலையில், மீண்டும் ஓர் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் பிலடெல்பியா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானம் விபத்துக்குள்ளானதில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். பிலடெல்பியா விமான விபத்து அமெரிக்காவில் இரண்டு நாட்களுக்குள் இரண்டாவது பெரிய விமான விபத்து ஆகும்.
வடகிழக்கு பிலடெல்பியா விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்டது. ஆனால், விமான புறப்பட்ட 30 வினாடிகளில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் காரணமாக பல கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்து பலர் காயமடைந்துள்ளனர். பிலடெல்பியா அவசர மேலாண்மை அலுவலகம் இந்த விபத்தை சமூக ஊடகங்களில் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று பென்சில்வேனியா கவர்னர் ஜோஷ் ஷாபிரோ தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் முழுவதும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. விமானம் கட்டிடத்தின் மேல் விழுந்து நொடிப்பொழுதில் தீப்பிடித்து விபத்துக்குள்ளான காட்சி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
காயமடைந்தவர்கள் உடனடியாக பிலடெல்பியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் மற்றும் உள்ளூர் போலீசார் சம்பவ இடத்திலேயே மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்து குறித்து விசாரணை நடத்த ஆளுநர் ஜோஷ் ஷாபிரோ உத்தரவிட்டுள்ளார், மேலும் விமான பாதுகாப்பு விதிகள் கடுமையாக்கப்படும் என்று கூறினார்.
Readmore: Budget 2025 | தொடர்ந்து 8 வது முறையாக பட்ஜெட் தாக்கல்.. புது சாதனை படைக்கப்போகும் நிர்மலா சீதாராமன்!