ஸ்ரீ ஹரி என்பவர் ஆந்திர மாநிலம் திருப்பதி பழைய வீராபுரத்தில் வசித்து வருகிறார். இவர் லீலாவதி என்ற பெண்ணை விரும்பி காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
மாமியார் வீட்டில் இருந்து வந்த லீலாவதியை அவரது பெற்றோர் தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தனர். அந்த தருணத்தில், சாதி மாறி திருமணம் செய்து கொண்டதால் கிராம மக்கள் லீலாவதியின் பெற்றோர் வீட்டை முற்றுகையிட்டு ரகளை செய்தனர் .
மேலும் லீலாவதி மற்றும் அவரது கணவர் ஸ்ரீஹரிக்கு அபராதம் விதிப்பதாக கூறியுள்ளனர். அதனை தொடர்ந்து விதிமுறைகளை மீறி வேற்று சாதியினரை திருமணம் செய்ததாக கூறி லீலாவதிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த லீலாவதியின் பெற்றோர் இதில் இருந்து விலக்கு அளிக்கும்படி கேட்டுக் கொண்டனர்.
அவர்கள் கேட்டுக் கொண்டதால் அபராதத் தொகையை 2 நாட்களுக்குள் கட்ட வேண்டும் என்று கூறியுள்ளனர். அவர்களால் சரியான நேரத்தில் பணத்தை தயார் செய்ய முடியாததால், கிராம மக்கள் ஆத்திரமடைந்து கற்பமாக இருக்கும் லீலாவதியை நடுரோட்டிற்கு தரதரவென இழுத்து வந்து சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர் இதனால் .கர்ப்பமாக இருந்த லீலாவதியின் கரு கலைந்தது.
சரமாரியாக அடித்த நிலையில் சரியான நேரத்தில் மீட்டு லீலாவதியை மருத்துவமனையில் சேர்த்ததால் அவரது உயிர் தப்பியது. இது குறித்து தகவல் கிடைத்த போலீசார் வழக்குப்பதிவு செய்து கிராமத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.இப்படி சாதி மாறி திருமணம் செய்ததால் இளம்பெண்ணுக்கு நடுரோட்டில் நடந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.