அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கேபிபி பாஸ்கருக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது..
திமுக அரசு பொறுப்பேற்றது முதல் ஊழல் மற்றும் லஞ்சம் வாங்கிய முன்னாள் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏக்கள் ஆகியோரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.. அந்த வகையில் அதிமுக அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர் என பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சோதனை நடைபெற்றது..
இந்நிலையில் நாமக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி பாஸ்கர் மற்றும் அவருக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்தி வருகின்றனர்.. இவர் 2016-21 வரை நாமக்கல் தொகுதி சட்டமன்ற உறுப்பினாராக இருந்தார்.. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.. பாஸ்கர் பணி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சுமார் ரூ.4.72 கோடி மதிப்பிலான சொத்துக்களை சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்து சோதனை நடத்தி வருகின்றனர்..
தனது பெயரிலும், தனது மனைவியின் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாகவும், 315 % சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.. ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. 2016 முதல் 2021 வரை எம்.எல்.ஏவாக இருந்த காலக்கட்டத்தில் தனது பதவியை தவறாக பயன்படுத்தி ரூ. 4 கோடி மதிப்பிலான சொத்துக்கள் சேர்த்துள்ளது தெரியவந்துள்ளது.. முதல் குற்றவாளியாக பாஸ்கரும், 2-வது குற்றவாளியாக அவரின் மனைவி உமாவும் சேர்க்கபப்ட்டுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது..