fbpx

விவாசியிகள் 7 பேர் மீது போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்டம் ரத்து…!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா சிப்காட் விரிவாக்கத்திற்கு எதிராக கடந்த 126 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த விவசாயிகள் 20 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் அருள், பச்சையப்பன், மாசிலாமணி, தேவன், பாக்கியராஜ், சோழன், விஜயன் ஆகிய 7 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. சிப்காட் விரிவாக்கத்திற்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேல்மா சிப்காட் செய்யாறு சிப்காட் அலகு 3 என்ற பெயரில் 3,174 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு கடந்த ஆட்சி காலத்தில் அரசாணை வெளியிடப்பட்டது. தொடந்து அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. 54 அலகுகளாக பிரித்து 20 அலகுகள் வரை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மேலும் 2,700 ஏக்கர் தரிசு நிலம் எனவும் மீதமுள்ள 326 ஏக்கர் பட்டா நிலம் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

மேல்மா சிப்காட் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கடந்த ஜூலை மாதம் தொடங்கிய காத்திருப்பு போராட்டம் 126 நாட்களாக நடைபயணம், மறியல் போராட்டம் என பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடைபெற்றது. மேல்மா சிப்காட் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, காவல் துறையினர் தடையை மீறி செய்யாறு பேருந்து நிலையத்தில் இருந்து கடந்த 2-ம் தேதி பேரணியாக புறப்பட்டனர். ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, நியாய விலை கடை அட்டைகளை ஒப்படைக்க செய்யாறு சார் ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்றனர். அப்போது, அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியபோது, இரண்டு தரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, விவசாயிகள் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். எனினும், அன்று மாலையே விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் கடந்த 4 ஆம் தேதி ஒருங்கிணைப்பாளர் அருள் ஆறுமுகம் உட்பட 20 பேரை பேருந்தின் கண்ணாடியை உடைத்ததாக கூறி கைது செய்யப்பட்டனர். இதில் அருள், பச்சையப்பன், மாசிலாமணி, தேவன், பாக்கியராஜ், சோழன், விஜயன் ஆகிய 7 பேர் மீது மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. மேலும் போராட்டக்கார்கள் மீது இதுவரை 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விவசாயிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பேசுபொருளாகி வருகிறது. இந்நிலையில் விவசாயிகள் 7 பேர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை காவல்துறை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Kathir

Next Post

"தினமும் பிஜேபிக்கு இதுதான் வேலை…" வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் கர்ஜித்த அமைச்சர் கே.என்.நேரு.!

Fri Nov 17 , 2023
திருச்சி மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.என்.நேரு திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு திமுக அரசிற்கு எப்படியாவது கலங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என பல முயற்சிகளை செய்து வருவதாகவும் குற்றம் சாட்டி இருக்கிறார். இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் “திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தை முதலில் திருச்சியிலிருந்து தொடங்க வேண்டும் […]

You May Like