fbpx

மார்பகத்தில் ஏதேனும் மாற்றமா..? புற்றுநோய் அபாயம்..!! சாதாரணமா நினைக்காதீங்க..!!

புற்றுநோயின் அபாயம் எங்கோ ஒரு சில இடத்தில் இருந்த நிலையில், தற்போது நம் அண்டை வீட்டையும் நெருங்கி விட்டது. இந்நிலையில், புதிய அறிக்கை ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது வேறொன்றும் இல்லை. சமீப காலமாக நாம் அதிகம் கேள்விப்படும் மார்பகப் புற்றுநோயைக் குறித்தது தான்..!! உடல் ரீதியாக பல இன்னல்களை கடந்து வரும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இப்போது வெளியான அறிக்கையில், 2040 ஆம் ஆண்டை நெருங்கும்போது, வருடத்திற்கு மார்பகப் புற்றுநோயால் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மரணிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

5 வருட கணக்கின்படி, உலகளவில் 2020 முடிய சுமார் 80 லட்சம் பெண்கள் மார்பகப் புற்றுநோய்கான சிகிச்சைப் பெற்று வந்தனர். இதே காலகட்டத்தில் 6 லட்சத்து 85 ஆயிரம் பேர் இந்த கொடிய நோய்க்காக தங்கள் உயிரைப் பறிகொடுத்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் இதன் தாக்கம் அதிகரித்து வருவதாக அறிக்கை வெளியிட்ட லான்செட் கமிஷன் குறிப்பிட்டுள்ளது. லான்செட் தனது அறிக்கையில், இந்த நோய் குறித்துள்ள வெளிப்படைத்தன்மையை சுட்டிக்காட்டியுள்ளது. மார்பகப் புற்றுநோயால் அறிகுறிகளால் ஏற்படும் விரக்தி, நிதிச்சுமை ஆகியவற்றால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக லான்செட் அறிக்கை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் எமோரி யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசின் பல்கலைக்கழகத்தின் மருத்துவ நிபுணர் ரேஷ்மா ஜக்சி கூறுகையில், “பெண்களின் அடிப்படை மனித உரிமைகள் வரலாற்று ரீதியாக அனைத்து அமைப்புகளிலும் ஆண்களை விட குறைவானதாகவே இருந்துள்ளது. இதன் தாக்கம் நோயாளிகளிடமும் காண முடிகிறது,” என்று தெரிவித்துள்ளார். எப்போதும் நம் மனதில் எழும் சந்தேகங்களை நாமே நிவர்த்தி செய்துவிடலாம் என்றில்லாமல், மார்பகத்தில் தோன்றும் சிறு மாற்றங்களையும் மருத்துவரிடம் தெரிவித்து ஆலோசனை பெற வேண்டும். மேலும், பெண் மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவரிடம், வீட்டில் இருந்தே மார்பக சோதனை எப்படி செய்வது என்பதை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் சோதனை செய்யும்போது, ஏதேனும் மாற்றத்தை உணர்ந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள். புற்றுநோயை விரைவாக கண்டறிந்தால், அதனை விரட்டியடிக்கலாம் என்பதை மறந்து விடாதீர்கள்…!

Read More : ’நீங்க ரொம்ப தொந்தரவு பண்றீங்க’..!! வடிவேலுவிடம் கடிந்து கொண்ட நபர்..!! சட்டென மாறிய முகம்..!!

Chella

Next Post

ஒரு எலும்பிச்சை பழம் இருந்தால்போதும்; உங்களது மொத்த கடனும் க்ளோஸ்

Sat Apr 20 , 2024
லட்சக் கணக்கில் நீங்கள் வாங்கி குவித்துள்ள கடனை அடைக்க இந்த எளிய பரிகாரத்தை செய்தாலே போதுமானது..! இன்றைய காலத்தில் கடன் இல்லாமல் வாழ்க்கையை ஓட்டுவது அவ்வளவு எளிது அல்ல. வீட்டிற்கு வாங்கும் பொருட்கள் முதற்கொண்டு இஎம்ஐ என்ற டிஜிட்டல் முறையில் கடனில்தான் வாங்கி குவிக்கிறோம். இப்படி ஆசையில் சிறிதாக தொடங்கும் கடன், நாளடைவில் பெரிதாவிடுகிறது. அடைக்க முடியாமல் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே லட்சக்கடனை அடைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு […]

You May Like