நடிகையும், தொலைக்காட்சி தொகுப்பாளருமான அபர்ணா வஸ்தரே (57) பெங்களூருவில் வியாழக்கிழமை மாலை காலமானார். அவர் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு காரணமாக காலமானார் என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.
மெட்ரோவில் பயணிக்கும் பெங்களூருவாசிகளுக்கு, 2014 ஆம் ஆண்டு முதல் கன்னட அறிவிப்பாளராக இருந்துள்ளார். அபர்ணா 1984 ஆம் ஆண்டு புட்டண்ணா கனகலின் கடைசிப் படமான மசானட ஹூவு மூலம் திரையுலகில் அறிமுகமானார். கன்னட தொலைக்காட்சியில் பிரபலமான முகம், 1990 களில் டிடி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் மற்றும் பல பொது நிகழ்ச்சிகளின் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்துள்ளார்.
அபர்ணா தொலைக்காட்சி சேனல்களில் மூதால மனே மற்றும் முக்தா போன்ற தொடர்களில் நடித்துள்ளார். 2013 இல், கன்னட ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியான பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக தோன்றினார். 2015 முதல், அவர் நகைச்சுவை தொலைக்காட்சி நிகழ்ச்சியான மஜா டாக்கீஸில் நடித்து வந்தார். இந்த நிலையில் அபர்ணா வஸ்தரே மறைவு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.