fbpx

பாலியல் ஆர்வத்தை தூண்டும் கோக், பெப்சி..!! ஆய்வு முடிவில் வெளியான புதிய தகவல்..!!

கோக், பெப்சி குடித்தால் பாலியல் ஆர்வம் அதிகரிக்கும் என்று ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது.

சீனாவில் மின்ஸு பல்கலைக்கழகத்தில், கார்பனேடட் குளிர்பானங்களால் கருத்தரித்தல் திறன் பாதிக்கப்படுகிறதா? என்று ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினர். அதில், ஆண்களின் விதைப்பை வளர்ச்சி மேம்படுவதுடன், பொதுவான பாலியல் ஆரோக்கியமும் மேம்படுகிறது என்பது தெரியவந்திருக்கிறது. இதற்கு முன்பு உலக அளவில் நடத்தப்பட்ட பல ஆய்வுகளில், சோடா பானங்களை அருந்தினால் ஆண்களின் இனப்பெருக்க நலன் பாதிக்கப்படும் என்றும், விந்தணுக்களின் தரம் வெகுவாகப் பாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தற்போதைய முடிவு முந்தைய ஆய்வு முடிவுகளுக்கு நேர்மாறானதாக அமைந்துள்ளது. சீன ஆய்வாளர்கள் ஆண் எலிகளை பரிசோதனைக்கு உட்படுத்தினர். முதலாவது குழுவினருக்கு கோக கோலா, பெப்ஸி போன்ற பானங்களும், மற்றொரு குழுவுக்கு வெறும் தண்ணீரும் அருந்துவதற்கு கொடுக்கப்பட்டது. 15 நாட்களுக்கு பிறகு கோலா மற்றும் பெப்ஸி அருந்திய எலிகளின் பாலியல் ஆர்வம் மேம்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த ஆய்வை விரிவாக்கம் செய்வதன் மூலமாக விதைப்பை தொடர்புடைய நோய்களுக்கு தீர்வு காண முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், இதனை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியது அவசியம் என்று மற்றொரு தரப்பு விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Chella

Next Post

குடிமகன்களுக்கு ஷாக்கிங் நியூஸ்..!! ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சரக்கு பாட்டில்களின் விலை உயருகிறது..!!

Thu Mar 30 , 2023
கோவை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இனி ஒரு பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படும் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார். குடிமகன்கள் குடித்துவிட்டு காலி மது பாட்டில்களை சாலைகளிலும், வனவிலங்குகள் நடமாடும் இடங்களிலும் உடைத்து விட்டுச் செல்கின்றனர். இந்நிலையில், காலி மது பாட்டிலை திரும்பப் பெறும் திட்டத்தைச் செயல்படுத்தும் விதமாக ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்த திட்டம் கோவையிலும் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊட்டி, கொடைக்கானல் என சுற்றுலா தலங்களில் […]

You May Like