fbpx

ஒகேனக்கல்லுக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிப்பு..! வீடுகளில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதி..!

ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடி நீர் வந்து கொண்டிருப்பதால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநில பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 72,646 கனஅடியாக இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 81,930 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதேபோல் கபினி அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 34 ஆயிரம் கனஅடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து 28 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த இரு அணைகளில் இருந்து இன்று காலை 6 மணி நிலவரப்படி தமிழகத்திற்கு வினாடிக்கு 1 லட்சத்து 9 ஆயிரத்து 930 கனஅடி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

ஒகேனக்கல்லுக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிப்பு..! வீடுகளில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதி..!
கர்நாடக அணை

கர்நாடகாவில் பெய்து வரும் மழையின் அளவை பொறுத்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு கூடுதலாகவும், குறைவாகவும் திறக்கப்பட்டு வருகிறது. காவிரி நுழைவிடமான கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு தண்ணீர் கரைபுரண்டு வந்தது. இதன் காரணமாக ஒகேனக்கல்லில் இன்று 5-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் இருகரையும் தொட்டு மூழ்கடித்தப்படி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நீர்வரத்து அதிகரித்ததால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் 6-வது நாளாக தடை விதித்துள்ளது

ஒகேனக்கல்லுக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிப்பு..! வீடுகளில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதி..!
ஒகேனக்கல்

இந்நிலையில், இன்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1 லட்சம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளதால் ஐவர்பாணி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகள் தெரியாதபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையில் 2 அடிக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், காவிரி கரையோர பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தீயணைப்பு படையினர், மீட்பு படையினரும் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Chella

Next Post

தனியார் பள்ளி மாணவிகள் மர்ம மரணம்..! விசாரிக்க தனி ஆணையம்..! வெளியான பரபரப்பு அறிக்கை..!

Fri Jul 15 , 2022
தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக தனி ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் கடலூரை சேர்ந்த ஸ்ரீமதி என்ற 12ஆம் வகுப்பு மாணவி அவரது விடுதி அறையில் மர்மமான முறையில் உயிரிழந்ததாக வெளியான செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. கனியாமூர் தனியார் பள்ளியில் […]
நம்ப வைத்து, ஏமாற்றிய பெற்றோர்! 12ம் வகுப்பு மாணவி காதலனுடன் தற்கொலை!

You May Like