கடந்த 2005ஆம் ஆண்டு ’வாழ்த்துகள்’ என்ற படத்தில் நடித்த போதிலிருந்தே சீமானுடன் தனக்கு பழக்கம் ஏற்பட்டதாகவும் இருவரும் 2011இல் திருமணம் செய்து கொண்ட நிலையில், ஒன்றாக குடும்பம் நடத்தியதாகவும், ஆனால் சீமான் தன்னை ஏமாற்றிவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக நடிகர் விஜயலட்சுமி புகார் அளித்திருக்கிறார்.
விஜயலட்சுமிக்கு ஆதரவாக தமிழர் முன்னேற்ற படை அமைப்பை சேர்ந்த வீரலட்சுமி முன்வந்துள்ளார். விஜயலட்சுமிக்கு தேவையான உதவிகளை வீரலட்சுமி செய்து வருகிறார். விஜயலட்சுமியின் புகார் தொடர்பாக சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகையில் அதெல்லாம் கேவலம், அதை பற்றி நான் பேச விரும்பவில்லை என்றார். மேலும், நானும் விஜயலட்சுமியும் திருமணம் செய்திருந்தால் அதற்கான ஆதாரத்தை காட்ட சொல்லுங்கள். லட்சியத்துடன் பயணிக்கும் என் அரசியல் பணிகளை இரு லட்சுமிகளும் முடக்க பார்க்கிறார்கள் என்று கொந்தளித்தார்.
இந்நிலையில், நடிகை விஜயலட்சுமிக்கு ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு சீமான் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தன்னை பற்றி பொதுவெளியில் அவதூறாக பேசிய நடிகை விஜயலட்சுமி, அவருக்கு துணையாக நிற்கும் தமிழர் முன்னேற்ற படை அமைப்பை சேர்ந்த வீரலட்சுமி ஆகிய இருவரிடமும் ரூ.1 கோடி கேட்டு சீமானின் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த நோட்டீஸ் கிடைத்த 15 நாட்களுக்குள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்காவிட்டால் இருவர் மீதும் வழக்கு தொடர போவதாக சீமான் அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.