மருந்துகளின் தன்மைகள் குறித்து எளிதில் அறியும் வகையில் விளையாட்டு வீரர்களுக்கு உதவ தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை செல்போன் செயலியை உருவாக்க உள்ளது மத்திய அரசு.
தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை ஊக்கமருந்து இல்லாத இந்திய விளையாட்டு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக மத்திய விளையாட்டுத்துறை செயலாளர் சுஜாதா சதுர்வேதி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் இந்தியா மற்றும் 20 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில் கலந்து கொண்டு பேசிய விளையாட்டுத்துறை செயலாளர் சுஜாதா சதுர்வேதி, பிரதமர் மோடியின் கேலோ இந்தியா உள்ளிட்ட விளையாட்டு போட்டி, தற்போது நடைபெற்று வருவதாகவும் இந்திய விளையாட்டு துறைக்கு மிக சிறந்த நேரம் என்றும் கூறினார். மருந்துகளின் தன்மைகள் குறித்து எளிதில் அறியும் வகையில் விளையாட்டு வீரர்களுக்கு உதவ தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை செல்போன் செயலியை உருவாக்க உள்ளதாக தெரிவித்தார்.