சீன அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் சீனாவில் உள்ள அதன் ஆப் ஸ்டோரில் இருந்து மெட்டா பிளாட்ஃபார்ம்களின் வாட்ஸ்அப் மற்றும் த்ரெட்ஸ்-யை அகற்றியதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
தேசிய பாதுகாப்புக் கவலைகளை மேற்கோள் காட்டி சீன அரசாங்கத்தால் செயலியை நீக்க உத்தரவிடப்பட்டதால், சீனாவில் உள்ள அதன் ஆப் ஸ்டோரில் இருந்து மெட்டா பிளாட்ஃபார்ம்களின் வாட்ஸ்அப் மற்றும் த்ரெட்ஸ்யை அகற்றியுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆப்பிள் நிறுவனம் அளித்த செய்தி அறிக்கையில், ” Facebook, Instagram மற்றும் Messenger உள்ளிட்ட பிற மெட்டா பயன்பாடுகள் சீனாவில் பயன்படுத்தப்படுகிறது. யூடியூப், எக்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட பல பிரபலமான பயன்பாடுகளும் பதிவிறக்கம் செய்யப்படுகிறது. ஆனால் வாட்ஸ் மற்றும் த்ரெட்ஸ் எப்படி தேசிய பாதுகாப்பை கெடுப்பதாக கருதுகிறார்கள் என தெரியவில்லை. சீனாவின் சைபர்ஸ்பேஸ் நிர்வாகம், சீனாவின் ஸ்டோர்ஃபிரண்டிலிருந்து தேசிய பாதுகாப்புக் கவலைகளின் அடிப்படையில் வாட்ஸப் மற்றும் த்ரெட்கயை அகற்ற உத்தரவிட்டது.
எங்களுக்கு முழு உடன்பாடு இல்லை என்றாலும், நாங்கள் செயல்படும் நாடுகளில் உள்ள சட்டங்களைப் பின்பற்ற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. தொழில்நுட்ப ஆர்வமுள்ள சீன நுகர்வோர், மற்ற நாடுகளில் உள்ள ஆப்பிள் ஆப் ஸ்டோர்களில் iCloud கணக்கு இருந்தால், அப்ளிகேஷன்களை பதிவிறக்கம் செய்ய முடியும் என ஐபோன் தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.
வாட்ஸ்அப் மற்றும் த்ரெட்ஸ்களில் உள்ள அரசாங்க உத்தரவு கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு புதிய விதியுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று சீனாவின் தொழில்நுட்பத் துறையில் உள்ள சில வல்லுநர்கள் கூறியுள்ளனர். இது சீனாவில் கிடைக்கும் அனைத்து பயன்பாடுகளும் அரசாங்கத்தில் பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில் அகற்றப்படும் அபாயம் உள்ளது என்கின்றனர்.