fbpx

ஐஃபோன் பயனர்களை அதிரவைத்த ஆப்பிள் நிறுவனம்..!! இந்த சேவைக்கான கட்டணம் தாறுமாறாக உயர்வு..!!

ஐஃபோன் பயன்பாட்டாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டு அதிர வைத்திருக்கிறது ஆப்பிள் நிறுவனம். அது என்னவெனில் வாரன்ட்டி முடிந்த ஐஃபோன் பேட்டரியை மாற்றுவதற்கான விலையை அதிகப்படுத்தியிருக்கிறது. வரும் பிப்ரவரி 2023ஆம் ஆண்டு வரையில் வாரன்ட்டி முடிந்த ஐஃபோன்களுக்கான பேட்டரியை மாற்ற பழைய விலையே தொடரும் என்றும், மார்ச் 1ஆம் தேதி முதல் மாற்றியமைக்கப்பட்ட விலை அமலுக்கு வரும் என்றும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐஃபோன் பயனர்களை அதிரவைத்த ஆப்பிள் நிறுவனம்..!! இந்த சேவைக்கான கட்டணம் தாறுமாறாக உயர்வு..!!

பேட்டரி மாற்றுவதற்கான விலை இதுவரை 69 அமெரிக்க டாலராக இருந்த நிலையில், மார்ச் 1 முதல் 20 டாலர் அதிகப்படுத்தப்படுவதாகவும், இது ஐஃபோன் 14 மாடல்களுக்கு முந்தைய அனைத்து ஐஃபோன்களுக்கும் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில், applecare அல்லது applecare+ போன்ற திட்டங்களை மேற்கொள்ளாதவர்களே இந்த விலையேற்றத்தால் பாதிக்கப்படுவார்கள். அதாவது பெரும்பாலான ஐஃபோன் வாடிக்கையாளர்கள் இந்த புதிய விலை ஏற்றத்தால் பாதிப்படையப்போவது உறுதியாகியுள்ளது. அதே சமயத்தில் apple care அல்லது apple care+ பிளான்களை வைத்திருப்போர் 80% கீழ் பேட்டரி ஹெல்த் இருந்து அதனை மாற்ற வேண்டுமென்றால் எந்த கட்டணமும் செலுத்தத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

அட நடிகை ராதாவின் அம்மாவா இவங்க…!

Tue Jan 3 , 2023
கடந்த 1981 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமான அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தின் மூலமாக பாரதிராஜாவால் தமிழ் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டவர் நடிகை ராதா. இந்த திரைப்படத்திற்கு பிறகு அப்போதைய காலகட்டத்தில் முன்னணி நடிகர்களாக இருந்த ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், சிவாஜி, சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்தார் நடிகை ராதா. மேலும் அப்போதைய காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகையாகவும் திகழ்ந்தார். […]

You May Like