fbpx

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 சீரிஸ்!… அசத்தலான அப்டேட் இதோ!

ஐபோன் 15 சீரிஸ் வஇரண்டு வண்ணங்களில் வெளியாக இருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் iPhone 15 சீரிஸுக்கு இரண்டு புதிய வண்ணங்களை அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.

iPhone 15 Pro க்கு அடர் சிவப்பு நிறம் மற்றும் iPhone 15 மற்றும் 15 Plus க்கு ஒரு பச்சை நிறம் என்று Gizmochina தெரிவித்துள்ளது. iPhone 15 Proக்கான புதிய சிவப்பு நிறம் “கிரிம்சன்” என்று பெயரிடப்பட்டுள்ளது. ஐபோன் 14 ப்ரோவின் ஆழமான ஊதா நிறத்தை விட சற்று இலகுவாக இருக்கும்.இருப்பினும், iPhone 15 மற்றும் 15 Plusக்கான பச்சை நிறம் iPhone 12 மற்றும் iPhone 11 ஆகியவற்றின் பச்சை நிறத்தைப் போலவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் இது இந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று நிபுணர்கள் கணிக்கின்றனர்.

Kokila

Next Post

இனிமேல் பிஸ்தா அதிகம் சாப்பிடாதீர்கள்!... ஏன் தெரியுமா?... ஆபத்துக்கள் அனைத்தும் அதில்தான் இருக்கு!

Sat Jul 8 , 2023
பிஸ்தாவை அதிகமாக உட்கொண்டால் பல வகையான இழப்புகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று கருதப்படும் பிஸ்தாவை, உணவில் சேர்த்துக் கொள்ளும்போது, உடலுக்கு ஏராளமான சத்துக்கள் கிடைக்கும். பொதுவாக, மக்கள் பாதாம் மற்றும் முந்திரி தவிர பிஸ்தாவை விரும்பி சாப்பிடுவார்கள். அவை வித்தியாசமான சுவை கொண்டவை. எனவே மக்கள் அவற்றை சாப்பிட ஆரம்பித்தவுடன், தொடர்ந்து சாப்பிடுவார்கள். பிஸ்தா சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து, […]

You May Like