fbpx

Woww…! தமிழக அரசு வழங்கும் ரூ.50,000 + 10 கிராம்‌ தங்க பதக்கம்‌…! 18 வயதிற்கு மேற்பட்டவர்கள்‌ விண்ணப்பிக்கலாம்‌…!

சமூக சேவகர்‌ விருது மற்றும்‌ பெண்களுக்கான சேவை நிறுவன விருது பெற விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன.

பெண்களின்‌ முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர்‌ மற்றும்‌ தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள்‌ சுதந்திர தின விழாவின்‌ போது தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களால்‌ ஒவ்வொரு ஆண்டும்‌ வழங்கப்பட்டு வருகிறது. சிறந்தசமூக சேவகருக்கு 10 கிராம்‌ (22 காரட்‌) எடையுள்ள தங்கப்பதக்கம்‌ மற்றும்‌ சான்றுவழங்கப்படுகின்றன. சிறந்த நிறுவனத்திற்கு ரூ.50,000 ரொக்கப்பரிசுடன்‌ 10 கிராம்‌ (22 காரட்‌) எடையுள்ள தங்கப்பதக்கம்‌ மற்றும்‌ சான்று வழங்கப்படுகின்றன.

சமூக பணியில்‌ ஈடுபடும்‌ இளைய தலைமுறையினருக்கு ஆர்வமூட்டுதல்‌, சமூக சேவையாளர்களின்‌ சவாலான பணியை அங்கீகரித்தல்‌, சமூக பராமரிப்பில்‌ பன்முகத்தன்மை மற்றும்‌ சமவாய்ப்பினை ஊக்குவிப்பதை நோக்கமாகக்‌ கொண்டு சமூக நலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்துறையின்‌ கீழ்‌ ஒவ்வொரு ஆண்டும்‌ இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.

2023 ஆம்‌ ஆண்டிற்கான சமூக சேவகர்‌ விருது மற்றும்‌ பெண்களுக்கான சேவைநிறுவன விருது குறித்த அறிவிப்பு https/awardstn.govin என்ற அரசின்‌இணையதளத்தில்‌ வெளியிடப்பட்டுள்ளது. விருதுகளைப்‌ பெற தமிழ்நாட்டைப்‌ பிறப்பிடமாகக்‌ கொண்ட 18 வயதிற்கும்‌ மேற்பட்டவர்கள்‌ விண்ணப்பிக்கலாம்‌.

இவ்விருதிற்கு குறைந்தபட்சம்‌ 5 ஆண்டுகள்‌ சமூக நலன்‌ சார்ந்த நடவடிக்கைகள்‌ மற்றும்‌ பெண்‌ குழந்தைகளுக்கு பெருமை சேர்க்கும்‌ வகையிலான நடவடிக்கைகள்‌, மொழி, இனம்‌, பண்பாடு, கலை, அறிவியல்‌, நிருவாகம்‌ ஆகிய துறைகளில்‌ தொண்டாற்றி இருக்க வேண்டும்‌. இத்தகைய சமூக சேவகர்கள்‌ மற்றும்‌ அரசு அங்கீகாரம்‌ பெற்ற சமூக சேவை நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன.

Vignesh

Next Post

பேராசையால் பணத்தை இழக்காதீர்!... சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை!

Wed Jun 7 , 2023
சமூக வலைதளங்கள் மூலம் தொடர்புகொண்டு பேராசையை தூண்டி நிதி மோசடி செய்யும் இணைய அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக, தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவின் கூடுதல் காவல்துறை இயக்குனர் சஞ்சய் குமார் ஐபிஎஸ் எச்சரித்துள்ளார். புதிய இணைய மோசடியை செய்பவர்கள் வாட்ஸ்அப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், யூடியூப், எஸ்.எம்.எஸ் அல்லது விளம்பரங்கள் மூலம் பொதுமக்களை தொடர்பு கொள்கிறார்கள். ஆரம்பத்தில் சில யூடியூப் வீடியோக்கள், ஹோட்டல்கள், இணையதளங்கள் போன்றவற்றுக்கு “லைக்” மற்றும் “கமெண்ட்” போடுவதால் […]

You May Like