மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகம் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய விருதுகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமான டிசம்பர் 3 அன்று வழங்கப்படுகின்றன. இந்த விருதுகளுக்கான வழிகாட்டுநெறிமுறைகள் சம்பந்தப்பட்ட அமைச்சகத்தின் www.disabilityaffairs.gov.in என்ற இணையப்பக்கத்திலும், விருதுகளுக்கான www.awards.gov.in என்ற இணையப்பக்கத்திலும், இடம் பெற்றுள்ளன.
2021 மற்றும் 2022-க்கான தேசிய விருதுகளுக்கு விண்ணப்பங்களும், பரிந்துரைகளும் வரவேற்கப்படுகின்றன. மத்திய உள்துறை அமைச்சகத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள இணையதளத்தின் மூலமாக மட்டுமே விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் அனுப்பப்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகளில் பல்வேறு நிலைகளில் தனித்திறமையுடன் விளங்குவோருக்கு 5 வகைமைகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. அதேபோல் மாற்றுத்திறனாளிகளாக இருப்பவர்களுக்கு அதிகாரம் அளித்தலில் சிறந்து விளங்கும் அமைப்புகளுக்கு 9 வகைமைகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.