fbpx

தூள்…! இந்த போட்டியில் வெற்றி பெற்றால் ரூ.15,000 மாணவர்களுக்கு வழங்கப்படும்…! முழு விவரம்

பள்ளி மாணவ, மாணவிகள் திருக்குறள் முற்றோதல் போட்டியில் பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 1,330 திருக்குறள்களையும் ஒப்புவிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் திருக்குறள் முற்றோதல் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நேராய்வில் கலந்து கொண்டு 1330 திருக்குறள்களையும் ஒப்புவிக்கும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, தலா ரூ.15,000/- பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இந்த போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் திறனறி குழுவினரால் திறனாய்வு செய்யப்பட்டு, தகுதியானவர்கள் பரிசுக்குப் பரிந்துரைக்கப்படுவர். இதற்கான திறனாய்வு தருமபுரி மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையினரால் நடத்தப்படும். போட்டியில் பங்கேற்பவர்கள் 1,330 திருக்குறளையும் முழுமையாக ஒப்புவிக்கும் திறன் பெற்றவர்களாக இருக்க வேண்டும். இயல் எண், அதிகாரம் எண், பெயர், குறள் எண் போன்றவற்றைத் தெரிவித்து, அதற்கான திருக்குறளைச் சொல்லும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். திருக்குறளின் பொருளை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாகக் கருதப்படும்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர் இந்த போட்டியில் பங்கேற்கலாம். ஏற்கனவே இந்தப் பரிசைப் பெற்றவர்கள் மீண்டும் பங்கேற்கக் கூடாது. போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவியர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று விண்ணப்பிக்கலாம் அல்லது https://tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு தருமபுரி மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் 20.08.2024ஆம் நாளுக்குள் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Applications are invited to participate in the Tirukkural siege competition for school students.

Vignesh

Next Post

உஜ்வாலா திட்டத்தின் கீழ் எல்பிஜி சிலிண்டருக்கு ரூ.300 மானியம்...! மத்திய அமைச்சர் தகவல்

Tue Jul 30 , 2024
300 subsidy per LPG cylinder under Ujjwala scheme

You May Like