தீன் தயாள் ஸ்பர்ஷ் யோஜனா என்ற திட்டத்தின் கீழ், அஞ்சல் தலை சேகரிப்பை ஊக்குவிக்கும் வகையில் உதவித்தொகைத் திட்டத்தை அஞ்சல் துறை 2017-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தி வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. இந்த ஆண்டில் இத்திட்டத்தில் பயன் பெற மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர் இத்திட்டத்தில் பங்கேற்று விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் ஆண்டு ஒன்றுக்கு ரூ.6000/- உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பதாரர் இந்தியாவிற்குள் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 6 முதல் 9-ம் வகுப்புக்குள் படிக்கும் மாணவராக இருக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட பள்ளியில் அஞ்சல் தலை சேகரிப்பு சங்கம் இருக்க வேண்டும். அதில் சம்பந்தப்பட்ட மாணவர் உறுப்பினராக இருக்க வேண்டும். தேர்வு நடைமுறையானது, அஞ்சல் தலை சேகரிப்புத் தொடர்பான வினாடி வினா மற்றும் அஞ்சல் தலை சேகரிப்புத் தொடர்பான திட்ட அறிக்கை சமர்ப்பித்தல் என 2 நிலைகளில் நடைபெறும். இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி 08.09.2023 ஆகும்.