fbpx

மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு…!

சேலம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; மாற்றுத்திறனாளிகள் ஒன்றிய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID Unique Disability ID Card) விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் அடையாள அட்டை பெற்றுள்ள அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.

இதுவரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறாத பயனாளிகள் மாற்றுத்தினாளிகள் அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் மார்பளவு புகைப்படத்துடன் தங்களது வசிப்பிடங்களுக்கு அருகாமையில் உள்ள இ-சேவை மையங்களில் விண்ணப்பித்து பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், அறை எண்.11. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், சேலம் 636 001 அவர்களை 0427 2415242 மற்றும் 9499933489 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார் ‌.

Vignesh

Next Post

அதானி குழுமத்தை சின்னாபின்னமாக்கிய ஹுண்டன்பர்க் அறிக்கை..!! உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு..!!

Wed Jan 3 , 2024
அதானி குழும நிறுவனங்கள் மீது ஹுண்டன்பர்க் அறிக்கையில் வெளியான குற்றச்சாட்டுகள் குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனம் ஹுண்டன்பர்க். இது கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அதானி குழுமம் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டிருந்தது. 413 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில், அதானி குழுமம் கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பதாக குற்றம்சாட்டியிருந்தது. இந்தியாவில் செயல்படும் அதானி குழுமத்தை சேர்ந்த 7 […]

You May Like