தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள 685 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இன்று மதியம் ஒரு மணி முதல் செப்டம்பர் 18 ம் தேதி மதியம் ஒரு மணி வரையிலும் இணைய வழியாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர் நடத்துனர் பனிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் மூலம் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும். தகுதி பெறும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, ஓட்டுநர் உடன் நடத்துநர் திறன் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.