fbpx

கவனம்…! 12,000 காலியிடங்கள்… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…! மிஸ் பண்ணிடாதீங்க…

எஸ்எஸ்சி தேர்வுக்கு இணையதளம் மூலம் இன்று மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மத்தியப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தால் 12,523 MTS (Multi-Tasking Staff) காலி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பாணை சமிபத்தில் வெளியிடப்பட்டது. தேர்வுக்கு www.ssc.nic.in என்ற இணையதளம்‌ வாயிலாக விண்ணப்பிக்க கடைசி நாள்‌:17.02.2023 என அறிவிக்கப்பட்டு இருந்தது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முடங்கிய எஸ்எஸ்சி இணையதளம் காரணமாக தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால 25-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் விண்ணப்பிக்காத நபர்கள் இன்று மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இத்தேர்விற்கான கல்வித்தகுதி, பத்தாம்‌ வகுப்பு தேர்ச்சி ஆகும்‌. மேலும்‌, 01.01.2023 அன்றைய நிலையில்‌ எஸ்‌.சி. எஸ்‌.டி பிரிவினர்‌ 30 வயதுக்குள்ளும்‌ இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்‌ 28 வயதுக்குள்ளும்‌ இருத்தல்‌ வேண்டும்‌. முன்னாள்‌ இராணுவத்தினர்‌ மற்றும்‌ மாற்றுதிறனாளிகளுக்கு நடைமுறை விதிகளின்‌ படி வயது வரம்பில்‌ சலுகை வழங்கப்பட்டுள்ளது. தேர்வுக்‌ கட்டணமாக ரூபாய்‌ 100 என நிர்ணயம்‌ செய்யப்பட்டுள்ளது. இதில்‌ பெண்கள்‌, எஸ்‌.சி, எஸ்‌.டி வகுப்பினர்‌ மற்றும்‌ மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம்‌ செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும்‌, இத்தேர்வினை தமிழ்‌ மொழியிலும்‌ எழுத மத்தியப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ அனுமதித்துள்ளது.

Vignesh

Next Post

கேரளாவில் இப்படி ஒரு கிராமமா?... சதுரங்க மையமாக திகழும் கிராமம்!... பலருக்கு வேலைவாய்ப்புகள்!... சுவாரஸ்ய தகவல் இதோ!

Sat Feb 25 , 2023
கேரளாவில் உள்ள ஒரு கிராமத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செஸ் விளையாடிவருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் மரோட்டிச்சல் என்ற கிராமம் அமைந்துள்ளது. சுமார் 5,000 மக்கள்தொகை கொண்ட இந்த கிராமம், சதுரங்க திறமைகளின் மையமாக அங்கீகாரம் பெற்றுள்ளது. பல தேசிய மற்றும் சர்வதேச செஸ் சாம்பியன்களை உருவாக்கியதன் மூலம் சதுரங்க கிராமம் என்ற புனைப்பெயரை இந்த கிராமம் பெற்றுள்ளது. இதற்கு எப்படி இந்த […]

You May Like