fbpx

நோட்…! ரூ.500 கட்டணம்…! பி.எட்‌ மாணவர் சேர்க்கைக்கு செப்.11 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்…!

பி.எட்‌ மாணவர் சேர்க்கைக்கு செப்டம்பர் 11 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என கல்லூரிக் கல்வி இயக்குநர் கீதா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள பி.எட்‌ முதலாம் ஆண்டில் மாணவர்கள் சேர்க்கைக்கான (2023-2024) விண்ணப்பங்களை https://www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். விண்ணப்பம் பதிவு செய்ய விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும் எனவும், எஸ்சி, எஸ்டி விண்ணப்பதாரர்கள் கட்டணமாக 250 செலுத்தினால் போதுமானது.

மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது தங்களது விருப்ப வரிசைப்படி கல்லூரிகளை தேர்வு செய்தல் வேண்டும். மேலும், கூடுதல் விபரங்கள் மற்றும் எந்தெந்த கல்லூரிகளில் என்னென்ன பாடப்பிரிவுகள், சேர்க்கை எண்ணிக்கை விவரங்கள் https://www.tngasa.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, யுபிஐ மற்றும் நெட் பேங்கிங் மூலமாகவும் செலுத்தலாம். மேலும், விபரங்களை பெறுவதற்கு 93634 62070, 9363462007, 93634 62042, 93634 62024 ஆகிய எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Vignesh

Next Post

மாஸ்..! பள்ளி மாணவர்கள் பாடத்திட்டத்தில் சந்திரயான்-3...! அமைச்சர் அன்பில் மகேஷ் அசத்தல் அறிவிப்பு...!

Sat Sep 2 , 2023
சந்திரயான்-3 குறித்து பாடப்புத்தகத்தில் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார் கடந்த 23-ம் தேதி சந்திரயான்-3-ன் விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. தொடர்ந்து அதிலிருந்த பிரக்யான் ரோவர் வெளியேறி, நிலவின் பரப்பில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. நொடிக்கு 1 சென்டி மீட்டர் என்ற வேகத்தில் ரோவர் உலா வருகிறது. 14 நாட்களுக்கு இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும். நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட […]

You May Like