fbpx

பெற்றோர்கள் கவனத்திற்கு…! இலவச கல்விக்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி நாள்…! உடனே முந்துங்கள்…!

இலவச மற்றும்‌ கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் நாளை மாலை வரை விண்ணப்பிக்கலாம்.

குழந்தைகளுக்கான இலவச மற்றும்‌ கட்டாய கல்வி உரிமைச்‌சட்டம்‌ 2009இன்‌ படி 2023-24ஆம்‌ கல்வி ஆண்டில்‌ 25% இட ஒதுக்கீட்டின்‌ கீழ்‌ வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும்‌ நலிவடைந்த பிரிவினரின்‌ குழந்தைகளுக்கு சிறுபான்மையற்ற தனியார்‌ சுயநிதி பள்ளிகளில்‌ LKG வகுப்பிலும்‌, 1-ம்‌ வகுப்பு முதல்‌ நடைபெற்று வரும்‌ பள்ளிகளில்‌ 1-ம்‌ வகுப்பு முதல்‌ மாணவர் சேர்க்கைக்கு நாளை மாலை வரை rte.tnschool.gov.in என்ற இணையதளம்‌ மூலம்‌ விண்ணப்பிக்கலாம்.

நாளை மாலை வரை பெறப்படும்‌ விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தகுதியான விண்ணப்பம் சார்ந்த விவரங்களும்‌, விண்ணப்பம்‌ நிராகரிக்கப்பட்டடிருப்பின்‌ அதற்கான காரணங்களும்‌ இணையதளத்திலும்‌, சம்மந்தப்பட்ட பள்ளித்‌ தகவல்‌ பலகையிலும்‌ வெளியிடப்படும்‌. ஒருவேளை நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிடக்‌ கூடுதலாக விண்ணப்பங்கள்‌ பெறப்பட்டால் சம்மந்தப்பட்ட பள்ளியில்‌ குலுக்கல்‌ முறை நடத்தப்பட்டு சேர்க்கைக்கான குழந்தைகள்‌ தேர்வு செய்யப்படுவார்கள்.

சேர்க்கைக்கு தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளின்‌ பெயர்‌ பட்டியல்‌ விண்ணப்ப எண்ணுடண்‌ இணைய தளத்திலும்‌ சம்மந்தப்பட்ட பள்ளியின்‌ தகவல்‌ பலகையிலும்‌ வெளியிடப்படும்‌.

Vignesh

Next Post

நக வெட்டியில் 2 கத்திகள் இருப்பது ஏன் தெரியுமா?... காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

Wed May 17 , 2023
ஆரோக்கியமான உடலின் திறவுகோல் ஒட்டுமொத்த சுகாதாரத்தை பராமரிப்பதாகும். ஒரு சில நாட்களுக்கு ஒருமுறை நகங்களை அவசரமாக செய்யாமல் உங்கள் நகங்களை பராமரிக்க எளிய கருவிகளில் ஒன்று நெயில் கட்டர் ஆகும் . வெவ்வேறு நபர்களுக்கு வெவ்வேறு சீர்ப்படுத்தும் தேவைகள் இருப்பதால், நெயில் கட்டர்கள் வெவ்வேறு வகைகளாக இருக்கலாம் – குட்டையான நகங்களுக்கு சிறிய வாயில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். தடிமனான அல்லது வளர்ந்த நகங்களுக்கு ஒரு பெரிய கிளிப்பர் அல்லது சிறந்த […]

You May Like