தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர்கள் அதிகாரிகள் உள்ளிட்டோரை நியமிக்கும் போது அரசன் அனைத்து திட்டங்களும் தேவையான மக்களை சென்றடைவது உறுதி செய்யப்படும் விதத்தில் பணி புரிய வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார்.
இந்த பணிகளை அரசு அடிக்கடி அதிகாரிகள் மூலமாக சோதனை செய்து வந்த நிலையில், முறையாக பணியை செய்யாத காரணத்தினால் தமிழக அமைச்சரவையில் அதிரடியாக பல மாற்றங்கள் செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது தமிழக மாவட்டங்களுக்கான பொறுப்பு அமைச்சர்கள் மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறார்கள்.
அந்த விதத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த காந்தி திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராகவும், திருவாரூர் மாவட்ட பொறுப்பாளர் இருந்த சக்கரபாணி கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராகவும், மாற்றப்பட்டிருக்கிறார்.
இதனை தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த மெய்யநாதன் அவர்களும் நாகை மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த ரகுபதி அவர்களும் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதோடு மாவட்டத்தின் வளர்ச்சி பணிகளை திருத்தும் நடவடிக்கையாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக அரசு தெரிவித்து இருக்கிறது.