fbpx

‘அந்த மனசு தான் சார் கடவுள்..!!’ 5 பவுன் தங்க நகையை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர்!!

குப்பையில் கிடந்த 5 சவரன் தங்க நகையை உரிமையாளரைத் தேடிக் கண்டுபிடித்து ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் ரவிக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

சென்னை அடையாறு அருகே வேலாயுதராஜா தெரு, மண்டலம் 13, வார்டு 171-ல் தூய்மைப் பணியாளர் ரவி என்பவர் தனது வழக்கமான பணிகளைச் செய்துகொண்டிருந்தார். அப்போது அவர் சுமார் 2,60,000 மதிப்புள்ள 5 சவரன் எடையுள்ள தங்கச் சங்கிலியை குப்பையில் இருந்து மீட்டார். இதையடுத்து, அவர் அந்த 5 சவரன் எடையுள்ள தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்தார். இவரின் இந்த செயலை அனைவரும் பாராட்டி வருகின்றர்.

முன்னதாக, சென்னை விருகம்பாக்கம், ராஜமன்னார் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தேவராஜ் என்பவருக்கு சொந்தமான 5 லட்சம் மதிப்புள்ள வைர ஆபரணத்தை, தூய்மை பணியாளர் அந்தோணி சாமி குப்பை கிடங்கில் இருந்து மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தார். இந்த சம்பவம் இணையத்தில் பரவி, பலரும் பாராட்டு தெரிவித்தனர். சென்னை மாநகராட்சி மேயர் பிரியா குப்பை வாகன ஓட்டுநர் அந்தோணிசாமியை நேரில் அழைத்து, சால்வை அணிவித்து, ஊக்கத்தொகை வழங்கி பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Read more ; Raayan movie Collection | முதல் நாளே வசூல் வேட்டையில் மாஸ் காட்டிய ராயன்..!! தனுஷ் கரியரில் புதிய சாதனை..

English Summary

Appreciation is pouring in for Ravi, the cleaner who found the 5 sawan gold jewelery lying in the garbage and handed it over to the owner.

Next Post

ஜம்மு காஷ்மீர் | குப்வாராவில் என்கவுண்டர்..!! இந்திய ராணுவ வீரர் பலி.. 5 பேர் காயம்!!

Sat Jul 27 , 2024
One Soldier Killed, Four Injured In Fresh Gunfight With Terrorists In J-K's Kupwara, Encounter Underway

You May Like