fbpx

தமிழகமே‌..! நெருங்கும் தீபாவளி… இதை பயன்படுத்தினால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும்…! அரசு கொடுத்த எச்சரிக்கை…!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பேக்கரி மற்றும் இனிப்பு, கார வகைகள் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, தீபாவளி பண்டிகை முன்னிட்டு இனிப்பு, காரவகைகளுக்கு சீட்டு நடத்துவோர் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள், உணவு பாதுகாப்பு துறையில் விண்ணப்பித்து கட்டாயம் உரிமம் பெற வேண்டும். ஏற்கனவே உரிமம் பெற்றிருந்தால் புதுப்பித்திருக்க வேண்டும். உரிமம் இல்லாமல் தயாரிப்பது கண்டறியப்பட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இனிப்பு, கார வகைகள் தயாரிக்க, தரமான மூலப்பொருட்களை மட்டுமே பயன்படுத்தி சுகாதாரமான முறையில் தயாரிக்க வேண்டும். கலப்பட பொருட்கள் பயன்படுத்தக் கூடாது. இனிப்பு வகைகளுக்கு அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் கூடுதலாக நிறம் சேர்க்கக்கூடாது. ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை மறுபடியும் சூடுபடுத்தி, கார வகைகள் தயாரிக்க பயன்படுத்தக் கூடாது.

தயாரிக்கும் இடம், விற்பனை செய்யும் இடம், இருப்பு வைக்கப்படும் இடங்கள் எப்போதும் சுத்தம் சுகாதாரமாக இருத்தல் வேண்டும். ஈக்கள், பூச்சிகள் வராமல் இருப்பதற்கு தடுப்பு முறைகள் மேற்கொள்ள வேண்டும். சமுதாய கூடங்கள், கல்யாண மண்டபங்கள் மற்றும் இதர இடங்களில் இனிப்பு, கார வகைகள் தயாரிப்பவர்கள் அதற்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும். உணவை கையாளுபவர்களுக்கு கட்டாயம் மருத்துவ பரிசோதனை செய்து மருத்துவ சான்று பெற்றிருக்க வேண்டும்.

பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்கான விபரச் சீட்டில் தயாரிப்பாளர் முழு முகவரி, உணவுப் பொருள் பெயர், தயாரிப்பு அல்லது பேக்கிங் தேதி, காலாவதியாகும் நாள், சைவ, அசைவ குறியீடு அவசியம் குறிப்பிட வேண்டும். பால்பொருட்களால் தயாரிக்கும் இனிப்பு வகைகளை, மற்ற இனிப்புகளுடன் கலந்து வைத்திருக்கக்கூடாது. இவற்றை எத்தனை நாட்களுக்குள் உபயோகிக்க வேண்டும் என்பதை லேபிலில் அச்சிட வேண்டும். உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் பயிற்சி பெற்ற நபர் பணியில் இருத்தல் வேண்டும்.

தடைசெய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கவர்கள், கப்புகள் பயன்படுத்தினால் ரூ.2,000/- அபராதம் விதிக்கப்படும். சூடான உணவுப் பொருட்கள் பிளாஸ்டிக் பேப்பர், கவரில் பொட்டலமிடக்கூடாது மீறினால் அபராதம் விதிக்கப்படும். பொதுமக்கள் உணவுப் பொருட்கள் தொடர்பான புகார்கள் இருப்பின், 9444042322 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு தெரிவிக்கலாம் அல்லது TNFSD Consumer app மூலமாகவும் புகார்கள் தெரிவிக்கலாம்.

Vignesh

Next Post

வெறும் ரூ.8,499-க்கு ஐபோன் 13..!! அசர வைக்கும் பிளிப்கார்ட் ஆஃபர்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Sat Nov 4 , 2023
ஆப்பிள் ஐபோன் 15 தொடரின் அறிமுகத்திற்குப் பிறகு, ஆப்பிள் ஐபோன் 13-ன் விலையை ரூ. 10,000 குறைத்தது ஆப்பிள் நிறுவனம். ஐபோன் 13, 2021ஆம் ஆண்டு ரூ.79,900 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இது ஆப்பிள் ஸ்டோரில் ரூ.59,900 விலையில் கிடைக்கிறது. பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனையில் ரூ. 43,500 தள்ளுபடிக்குப் பிறகு ஆப்பிள் ஐபோன் 13 ஐ ரூ.8,499 என்ற விலையில் வாங்கலாம். அதாவது, ஐபோன் 13 ரூ.7,901 […]

You May Like