fbpx

Ministerial meeting: பரபரப்பில் அரசியல் களம்!… பிரதமர் மோடி தலைமையில் மார்ச் 3-ல் அமைச்சர்கள் கூட்டம்!

Ministerial meeting:விரைவில் மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக மார்ச் 3ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

மக்களவை தேர்தல் தேதி மார்ச் முதல் அல்லது 2-வது வாரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு மாநிலங்களின் தயார்நிலை குறித்து ஆய்வு செய்யும் நடவடிக்கையை தேர்தல்ஆணையம் தொடங்கி விட்டது. இந்நிலையில் வரும் மார்ச் 3-ம் தேதி மத்திய அமைச்சர்கள் கூட்டம் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூட்டம் சாணக்யாபுரியில் உள்ள சுஸ்மா சுவரான் பவனில் நடைபெறவுள்ளது. இதில் மத்தியஅமைச்சர்கள், இணை அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொள்கின்றனர்.

இதில் முக்கிய கொள்கை விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. பலதிட்டநடவடிக்கைகளின் அமலாக்கம் குறித்தும் மதிப்பீடு செய்யப்படவுள்ளது. அரசு நிர்வாகம் தொடர்பான விஷயங்களில் பிரதமர் மோடி தனது தொலை நோக்கு பற்றி பேசுவார் எனத் தெரிகிறது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாக கூட்டப்படும் இந்த அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மக்களவை தேர்தல் தேதி மார்ச் முதல் அல்லது 2-வது வாரத்தில் வெளியாகலாம். முன்னதாக, கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் மார்ச் 10-ம்தேதி அறிவித்தது. கடந்த 2014-ம் ஆண்டில் மக்கள தேர்தல் தேதி மார்ச் 5-ம் தேதி அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary: Ministerial meeting on March 3 under the leadership of Prime Minister Modi

Readmore: ஒரு நீதிபதி செய்யுற காரியமா இது..? கோர்ட் அறையில் அலறிய பெண்..!! பகீர் சம்பவம்..!!

Kokila

Next Post

BJP Annamalai | திமுக - அதிமுகவை ஓரங்கட்டிய பாஜக..!! அண்ணாமலையின் புதிய வியூகத்தால் முதலிடம்..!!

Thu Feb 22 , 2024
BJP Annamalai | நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், போட்டியிடுவதற்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். அந்தவகையில், திமுக தனது கூட்டணி குறித்த முடிவுகளை தெரிவித்துள்ளது. மேலும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் தனது கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொடங்க காத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், மக்களவை தேர்தலையொட்டி கொங்கு மண்டலத்தில் நியூஸ் கிளவுட் என்ற தனியார் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் திமுக […]

You May Like